8 வருடமாக ஜோதிகா மறைத்த விடயம் இப்போ அம்பலமானது…!!

Read Time:2 Minute, 59 Second

jyothikaதிருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடித்து வரும் படம் ‘36 வயதினிலே’. மலையாளத்தில் வெளிவந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் ரீமேக்கே ‘36 வயதினிலே’. இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் மகன், மகள்களுடன் கலந்துகொண்டார். மேலும், சிவகுமார், கார்த்தி, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், பாண்டிராஜ், வெங்கட் பிரபு, ராதாமோகன், பாலா, தரணி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சூர்யாவின் அம்மா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் படத்தில் இடம்பெற்ற ‘வாடி ராசாத்தி’ பாடலை பின்னணி பாடகி லலிதா பாடினார்.

பின்னர், சூர்யா பேசும்போது, இந்த படத்தோட இயக்குனர் ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ் தயாரிப்பாளர் தனஞ்செயன் மூலமாகத்தான் எனக்குத் தெரியும்.

8 வருடமாக என்னையும், என் குழந்தைகளையும் பராமரிப்பதில் அக்கறை காட்டிய ஜோதிகா, தனது மனதுக்குள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை மூடி மறைத்து வைத்துக் கொண்டே இருந்துள்ளார். ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ் வந்து இந்த கதையை சொன்னதும், இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையை ஜோதிகாவின் முகத்தில் பார்த்தேன். உடனே, என்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவெடுத்தேன்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று என் மனதில் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது. இப்படத்துக்காக 36 வயதுடைய 10 பெண்களுக்கு அவர்களுடைய நிறைவேறாத கனவுகளை நிறைவேற்றி வைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதடுக்கு லிப்ஸ்டிக் போடுவது எப்படி…?
Next post 5 வருடமாக சுவற்றுக்குள் சிக்கித்தவித்த பூனை (காணொளி)!!