உடை மாற்றும் அறையை நோக்கி கேமரா: தில்லாலங்கடி வேலை செய்த பேப் இந்தியா ஊழியரை கண்டுபிடித்தது கோவா போலீஸ்!!

Read Time:2 Minute, 3 Second

f27d797c-2b55-4870-b413-ada7cb0f93e1_S_secvpfகோவா மாநிலத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்ற சென்ற அறையை நோக்கி கேமரா வைக்கப்பட்டு இருந்த வழக்கில் பேப் இந்தியாவின் சபல கேஸ் ஊழியரை அடையாளம் கண்டது கோவா போலீஸ்.

கேமரா குறித்து ஸ்மிரிதி புகார் அளித்தவுடன், போலீசின் சந்தேக வலையில் இருந்த நபர் அவசர அவசரமாக கேமராவின் திசையை மாற்றியது தெரிய வந்துள்ளதால், அவர் தான் குற்றவாளி என்பது நிரூபணமானதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அடையாளம் காணப்பட்டுள்ள நபர் மட்டுமே இக்குற்றத்தை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்த போலீசார், அந்த சபல கேஸ் ஊழியருக்கு பின்னால் மேலும் சில சபல கேஸ்கள் இருக்கக்கூடும் என கூறுகின்றனர்.

ஸ்மிரிதி புகார் பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்தவுடன் கைது செய்யப்பட்ட நான்கு ஊழியரில், தற்போது போலீசாரால் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நபரும் இடம்பெற்றுள்ளதாக குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளரான கார்த்திக் காஷ்யப் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் அந்நபரின் பெயரை வெளியிட முடியாது என அவர் தெரிவித்தார். எனினும் கைதானவர்களில் ஒருவரான பரேஷ் பகத் என்பவரிடம் தான் வீடியோ ரெக்கார்டிங் ரூமின் பாஸ்வேர்ட் உள்ளதால் அவர் தான் குற்றவாளி என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட்டிக்கடனை அடைக்க சிறுமியை கடன் கொடுத்தவருக்கே திருமணம் செய்து வைத்த பெற்றோர்!!
Next post கிரேக்க நாட்டுக்கு புதிய தூதராக தமிழக பெண் ஐ.எப்.எஸ். அதிகாரி நியமனம்!!