நெல்லை அருகே பஞ். தலைவியின் உறவினர் வெட்டிக்கொலை!!

Read Time:3 Minute, 46 Second

3d4a5ffc-4d43-4516-a12b-826ad46d350f_S_secvpfநெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது52). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் இன்று காலை வீட்டு அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கும்பல் கிருஷ்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

சம்பவ இடத்தில் கிருஷ்ணனின் உறவினர்கள் திரண்டனர். இதுபற்றி மானூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கிருஷ்ணனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. சேதுராயன்புதூர் பஞ்சாயத்து தலைவியாக பணியாற்றி வருபவர் ஜெயராணி. இவரது கணவர் பொன்னுச்சாமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரனுக்கும் பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2013 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ந் தேதி ராமச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி ஜெயராணி உட்பட பத்து பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட பொன்னுச்சாமி ஜாமீனில் வெளிவந்த நிலையில் அவரது ஆதரவாளர் ராமர் என்பவர் ராமச்சந்திரனின் ஆதரவாளர்களால் படுகொலைசெய்யப்பட்டார்.

இந்த நிலையில் சேதுராயன் புதூரில் உள்ள நூலகத்தில் இருந்த பொன்னுச்சாமியை கடந்த ஆண்டு மே மாதம் 9–ந்தேதி ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் கொலை செய்தனர். பொன்னுசாமியின் அண்ணன் தான் தற்போது கொலை செய்யப்பட்ட கிருஷ்ணன். பொன்னு சாமியை கொலை செய்தவர்களை கிருஷ்ணன் பழிவாங்க திட்ட மிட்டிருந்தாராம்.

இதை அறிந்த எதிர் தரப்பினர் கிருஷ்ணன் பழி வாங்கும் முன்பாக அவரை கொலை செய்யவேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று காலை வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கிருஷ்ணனை வெட்டி கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படையினர் கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த கொலை காரணமாக சேதுராயன்புதூரில் பதட்டம் நிலவுகிறது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாமக மகளிர் அணி நிர்வாகி கைது எதிரொலி: போலி சான்றிதழ்கள் மூலம் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் கலக்கம்!!
Next post கள்ளக்குறிச்சி அருகே நர்சிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை!!