கள்ளக்குறிச்சி அருகே நர்சிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை!!

Read Time:1 Minute, 40 Second

94e6bfca-480f-4457-96c2-a3731b8ce333_S_secvpfகள்ளக்குறிச்சி அருகே பாண்டியன்குப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மகள் தமிழரசி (வயது 19). இவர் சின்னசேலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை தமிழரசி வீட்டில் டி.வி. நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தை செல்வராஜ் தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது ஏன் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று தமிழரசியை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த தமிழரசி வீட்டில் வைத்திருந்த விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சு கொல்லி மருந்தை (விஷம்) குடித்துவிட்டார்.

இதில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த தமிழரசியை அவரது பெற்றோர் மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை தமிழரசி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லை அருகே பஞ். தலைவியின் உறவினர் வெட்டிக்கொலை!!
Next post 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: கைதான தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!