ஏவுகணை சோதனை: வடகொரிய அதிகாரிகள் ஜப்பான் வர தடை

Read Time:2 Minute, 11 Second

Japan-N.Korea.jpgவடகொரியா ஏவுகணை சோதனையை புதன்கிழமை நடத்தியதையடுத்து அந்த நாட்டு அதிகாரிகள் ஜப்பான் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரிய வர்த்தகக் கப்பல் ஜப்பானுக்கு வருவதற்கும் இதே போன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தலைமை காபினெட் செயலர் ஷன்úஸô தெரிவித்தார். அவர் கூறியதாவது: வடகொரியாவின் ஏவுகணை சோதனையையடுத்து அந்த நாடு தொடர்பாக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

அந்த ஏவுகணை சோதனையானது ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் தடை விதிப்பு அவசியமாகிறது. இந்த தடையானது எவ்வளவு நாள் இருக்கும் என்பதை இப்போதே கூற இயலாது.

வடகொரியா ஏவுகணை சோதனை குறித்த சர்வதேச அளவிலான கருத்துக்கேற்ப வடகொரியா மீது பொருளாதார தடை, பணம் அனுப்புவது முடக்கம் போன்ற அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார் ஷன்úஸ.

தடை செய்யப்பட்டுள்ள வட கொரிய கப்பலான மன்கியாங்பாங்-92 இரு நாடுகள் இடையிலான முக்கிய வர்த்தக கப்பலாகும். இக் கப்பல் புதன்கிழமை அதிகாலை வடக்கு ஜப்பானின் நிகாடா துறைமுகத்துக்கு வர வேண்டியதாகும். இந்த நிலையில் அக்கப்பலுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் நிரந்தரமாகத் தங்கும் பயணிகள் யாரும் அந்த கப்பலில் இருந்தால் அவர்களை இறங்கிவிட்டு விட்டு உடனடியாக வடகொரிய கப்பல் வெளியேறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விண்வெளி ஓடம் வெற்றி: “நாசா’ மகிழ்ச்சி
Next post TMVP பிரதிநிதிகளுடன் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தலைமையிலான குழுவினர் சந்திப்பு