அகோரப்பசி நோயால் பாதிக்கப்பட்ட குண்டு குழந்தைகளுக்காக கிட்னியை விற்கும் தந்தை!!

Read Time:1 Minute, 45 Second

eff69132-f00d-4f91-a0a2-42bec34b8e8c_S_secvpfகுஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாய் நந்த்வானா(34). கூலி தொழிலாளியான இவருக்கு மூன்று குழந்தைகள். முதல் பெண் குழந்தை யோகிதாவுக்கு 5 வயதாகின்றது. இவளது உடல் எடை 75 பவுண்டு, இரண்டாவது மகள் அனிஷாவுக்கு 3 வயது. இவளது உடல் எடை 105 பவுண்டு, ஒன்றரை வயதாகும் மூன்றாவது ஆண் குழந்தை ஹர்ஷின் எடை 35 பவுண்டு.

இவர்கள் மூன்று பேரும் ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்கு வரக்கூடாத ’பிரேடர்-வில்லி ஸிண்ட்ரோம்’ என்ற கொடூரமான அதிகமாக பசி எடுக்கும் அகோரப்பசி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாப்பிட்ட உணவு சிறிது நேரத்துக்குள் செரிமானமாகி, உடனடியாக இவர்கள் மூன்று பேரும் கோரஸாக ‘அம்மா.., பசிக்குதே..,’ பாட்டுப் பாட ஆரம்பித்து விடுவதால் இவர்களின் தாயார் பிராக்னா பென், எந்நேரமும் அடுப்படியே கதியாக இருந்து வருகிறார்.

கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து கூலி தொழிலாளியான ரமேஷ்பாய் நந்த்வானாவால் இவர்களின் பசியை போக்க தீனி போட முடியவில்லை. எனவே, தனது இரு சீறுநீரகங்களில் ஒன்றை விற்று பிள்ளைகளின் அகோரப்பசி நோயை போக்கவும், உடல் பருமனை குறைக்கவும் ரமேஷ்பாய் நந்த்வானா முடிவு செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனநிலை பாதிக்கப்பட்ட மகனை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை!!
Next post பரீட்சையில் தோல்வி: ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!