முகநூலில் முதல்-மந்திரியின் படத்திற்கு அவமதிப்பு: மைசூரில் பரபரப்பு!!

Read Time:1 Minute, 33 Second

3a851c19-8b71-4667-b299-e86f6e739003_S_secvpfமுகநூலில் சித்தராமையாவின் உருவப்படத்திற்கு அவமதிப்பு செய்த மைசூருவை சேர்ந்த வாலிபரின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க முயன்றதாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மைசூரு டவுனில் இனகல் பகுதியை சேர்ந்தவர் வாசு கவுடா (வயது 26). இவர் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையாவின் உருவப்படத்திற்கு அவமதிப்பு செய்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் பற்றி மைசூரு மாநகர காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரசார் வாசு கவுடாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாகவே வாசு கவுடா தனது வீட்டில் இருந்து தலைமறைவாகிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரசார், அவரது வீட்டிற்குள் நுழைய முயன்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருநங்கைகளைக் கொண்டாடும் தீபிகா படுகோனின் மை சாய்ஸ் – வீடியோ இணைப்பு!!
Next post கண்ணமங்கலத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி!!