ரூ.5 ஆயிரம் தராமல் இழுத்தடித்ததால் நடிகை நீத்து அகர்வாலை டிராவல்ஸ் அதிபர் தாக்கினார்: போலீசில் புகார்!!

Read Time:3 Minute, 42 Second

365b78a5-13bb-49ef-8ada-95964a1924f1_S_secvpfதெலுங்கு நடிகை நீத்து அகர்வால். இவர் செம்மரகட்டை கடத்தல்காரன் மஸ்தான்வலி தயாரித்த சினிமா படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகை நீத்து அகர்வாலுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரும், குழந்தையும் உள்ளனர்.

இதற்கிடையே செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் மஸ்தான் வலி கைதானதைத் தொடர்ந்து நடிகை நீத்து அகர்வாலும் கர்ணுல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரது வங்கி கணக்கு மூலம் கடத்தல்காரர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைதான நீத்து அகர்வால் நந்தியால் சப்–ஜெயிலில் அடைக்கப்பட்டார். 10 நாட்களுக்கு பின் ஜாமீனில் விடுதலையானார். நடிகை நீத்து வாரம் ஒருமுறை ருத்ராவரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி நேற்று ருத்ராவரம் போலீசில் கையெழுத்திட்டார்.

தனது காரை ஒரு இடத்தில் நிறுத்தி வைத்து இருந்தார். கையெழுத்து போட்ட பின்பு காரில் ஏறிச்சென்றார். அப்போது டிராவல்ஸ் அதிபர் நாகராஜீ அங்கு வந்து காரை மறித்து நிறுத்தினார். ஜெயிலில் இருந்த போது, உணவு வாங்கி கொடுத்தது மற்றும் இதர வகையில் செலவழிந்த பணம் ரூ.5 ஆயிரம் தருமாறு கேட்டார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது நீத்து அகர்வாலை டிராவல்ஸ் அதிபர் நாகராஜீ தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் நீத்துவை தாக்கவில்லை என்று நாகராஜீ மறுத்துள்ளார்.

இதற்கிடையே நாகராஜீ பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது. இவர் இதற்கு முன் ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவாக பணிபுரிந்து வந்தார். செம்மரம் வெட்ட தமிழகத்தில் இருந்து தொழிலாளர்களை பஸ்சில் அழைத்துச் சென்றதாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதனால் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு அனந்தபூரில் டிராவல்ஸ் நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தார்.

தற்போது இவர் நீத்துவை தாக்கியதற்கு பண தகராறு காரணமா? அல்லது செம்மரக்கடத்தல் தகராறா? என போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

முன்னதாக போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட நடிகை நீத்து அகர்வால் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தனக்கும் செம்மரக்கட்டை கடத்தலுக்கும் தொடர்பு இல்லை. செம்மரம் எப்படி இருக்கும் என்றே தெரியாது, மஸ்தான் வலி தனது கணவர் என்ற முறையில் அவரிடம் தனது வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம். கார்டு முதலியவற்றை கொடுத்தேன். ஆனால் அவர் என்னை சிக்கலில் மாட்டி விட்டார்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு!!
Next post திகார் ஜெயிலில் கைதி கத்தியால் குத்திக் கொலை!!