சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு!!

Read Time:2 Minute, 12 Second

timthumbசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு!! உற்சாகத்தில் அண்ணா திமுகவினர்

பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை அண்ணா திமுகவினர் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 18 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஜெயலலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இம்மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்களை ஏற்று 4 பேரையும் விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பளித்தார்.

கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமியின் இந்த உத்தரவை வரவேற்று அண்ணா தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடனுக்கு சிகரெட் கொடுக்க மறுத்த முதியவரை அடித்துக் கொன்ற தொழிலாளி!!
Next post ரூ.5 ஆயிரம் தராமல் இழுத்தடித்ததால் நடிகை நீத்து அகர்வாலை டிராவல்ஸ் அதிபர் தாக்கினார்: போலீசில் புகார்!!