சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தையின் சிகிச்சைக்காக, பிறந்த 4 நாட்களில் குழந்தை விற்பனை!!

Read Time:2 Minute, 27 Second

8874dd8b-c900-4823-84f4-5bf7c50887be_S_secvpfசத்தீஸ்கர் மாநிலம் பாலாங்கிர் நகரைச் சேர்ந்தவர் பேத பியாசாதாஸ் இவரது மனைவி ஹிமாத்ரி.

தாஸ் சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். அவரது 2 கால்களிலும் புண் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மாவட்ட அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவரை மேல் சிகிச்சைக்காக பர்லாவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்க டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

ஆனால் சிகிச்சை செலவுக்கு அவர்களிடம் பணம் இல்லை. இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன் ஹிமாத்ரிக்கு குழந்தை பிறந்தது. இதனால் குடும்பம் மேலும் அவதிப்பட்டது.

அரசு அதிகாரிகளிடம் உதவி கேட்டு தாஸ் கோரிக்கை விடுத்தார். யாரும் உதவ முன் வராததுடன் அவரது கோரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து கணவன்–மனைவி இருவரும் 4 நாள் குழந்தையை விற்க முடிவு செய்தனர். காரியா பந்த் என்ற இடத்தில் வசிக்கும் தாசின் தங்கைக்கு அந்த குழந்தையை விற்றனர். விதவையான அவர் அங்கன்வாடியில் பணிபுரிந்து வருகிறார். அவர் குழந்தையை பெற்றுக்கொண்டு தாசின் மருத்துவ செலவுகளை கவனித்துக் கொண்டார்.

இந்த சம்பவம் பற்றி குழந்தைகள் நல அமைப்புக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் போலீசில் புகார் செய்தனர். மாவட்ட கலெக்டர் முத்துக்குமார் கூறுகையில், இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தாசுக்கு சிகிச்சைக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றும் கூறினார்.

4 நாள் குழந்தையை விற்ற தம்பதிக்கு ஏற்கனவே 10 வயதில் ஒரு மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். மகன் பாட்டி வீட்டில் வளர்கிறான். மகள் மட்டும் அவர்களுடன் உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குற்றச்சாட்டிலிருந்து விடுதலையான ஆண்மகனை கற்பழிப்பு வழக்கில் இருந்து மீண்டவர் என கூறலாமா?: பெண் நீதிபதி நச் கேள்வி!!
Next post மத்திய பிரதேசத்தில் மதிய உணவில் முட்டையை சேர்க்க முதல்–மந்திரி எதிர்ப்பு!!