புங்குடுதீவின் மாணவி வித்தியா படுகொலையும்.., சுவிஸ்ரஞ்சனுக்கு சூழ்ந்த பழியும்.. பின்னணியென்ன?? -புங்கையூரான் (கட்டுரை)

Read Time:9 Minute, 35 Second

ran copy
புங்குடுதீவின் மாணவி வித்தியா படுகொலையும்.., சுவிஸ்ரஞ்சனுக்கு சூழ்ந்த பழியும்.. பின்னணியென்ன?? -புங்கையூரான் (கட்டுரை)

புங்குடுதீவு வித்தியா படுகொலையும் அதன் பின்னர் உருவாகிய பழிதீர்க்கும் படலமும் விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். காரணம் என்னவென்றால் வித்தியா வன்புணர்வு செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது ஒரு திட்டமிடப்பட்டது என்றோ அல்லது காத்திருந்து பழி தீர்க்கப்பட்டது என்றோ உறுதியாக சொல்லிவிட முடியாது. ஆனாலும் வித்தியா படுகொலை செய்யப்பட்ட பின்பு கைது செய்யப்பட்ட, படுபாதக சூத்திரதாரிகள் தொடர்பாக குறிப்பாக, சுவிஸ்குமார் (பிரகாஷ்) என்பவர் தொடர்பாக அதீத கவனமும், அவர் தொடர்பான கருத்துப் பகிர்வும் பழிதீர்க்கும் பகுதியாகவே புலப்பட்டது.

சுவிஸ் பிரகாஷ் அல்லது குமாரை, சுவிஸ்ரஞ்சன் எனக் கருத்துக் கூறியவர்கள் அநேகர் சாதாரணமானவர்கள் இல்லை. பல்வேறு பின்புலத் தளங்களில் செயற்பாடுகள் கொண்டவர்களாகளாகவே காணப்பட்டனர். இவர்கள் தான் மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட பகீரதப் பிராயத்தனம் செய்ததை பாமரரும் புரிந்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

புங்குடுதீவைச் சேர்ந்த இருவர் சுவிஸில் வாழ்ந்து வருகிறார்கள். உருவத்தில் இருவரும் ஒரே தோற்றத்தில் இருந்தாலும் இருவரின் பிறப்பும் DNA யும் ஒன்றல்ல. இதனை நன்றாக அறிந்த சிலர், ஒருவர் செய்த தவறுக்கு இன்னுமொருவரிடம் பழிவாங்க திட்டமிட்டு செய்த சதியாகவே நான் இதனை கருதுகிறேன்.

ஏனெனில் குற்றம் சாட்டப்பட்ட சுவிஸ் குமார் போன்ற சாயல் கொண்ட சுவிஸ் ரஞ்சன் அரசியல் பிரபலங்களுடன் தோன்றும் புகைப்படங்களை போட்டு “அவர் தான் இவர்” என்று மாயையை உருவாக்கி, நடக்கும் விசாரணையை குழப்பி, உண்மையான குற்றவாளியை தப்பி ஓடுவதற்கு துணை செய்தவர்களும் ஈழத்தமிழர்கள் தான் எனும்போது இவர்களிடம் தேசப்பற்றோ, இனப்பற்றோ இல்லை என்பற்கும் மேல் மனிதாபிமானமே இல்லாத தமிழர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

சுவிஸ்ரஞ்சன் அரசியல் பிரமுகங்களுடன் இருக்கும் படங்களை இணையத்தில் விடுவதற்கு தன்னை அறிந்தோ, அறியாமலோ உதவி வழங்கியவர் ஈழ வழக்கறிஞரான ஒரு பெண் என்பது மிகவும் வேதனையாகவுள்ளது. ஒரு பெண்ணாக இன்னுமொரு பெண்ணுக்கு நடந்த அநியாயத்திற்கு நியாயம் தேடாமல் உண்மையான குற்றவாளியை காப்பாற்ற இவர் எடுத்த முயற்சி, இவருக்கு மேலிருக்கும் பிரபல சட்டதரணியின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

“ஏன் இப்படி செய்தீர்கள் அக்கா?” என்று ஒருவர் அவரிடம் வினவ, மழுப்பலான பதிலை கொடுத்து, இங்கு சிறந்த வழக்கறிஞர்கள் இல்லையா? எதற்காக கொழும்பிலிருந்து வந்து வித்தியாவுக்காக ஆஜராக வேண்டும்” என்ற அவரின் ஆதங்கமான செய்தி, அவளையும் யாரோ இயக்கியுள்ளார்கள் என்பதை காட்டுகிறது.

இவர்களின் நோக்கம் :
• சுவிஸ் பிரகாஷ் அல்லது சுவிஸ் குமார் தான் “சுவிஸ்ரஞ்சன்” என்று திரும்பத்திரும்ப கூறி, சுவிஸ் குமார் தொடர்பாக காவல்துறையினரின் கவனத்தை திசைதிருப்பி, தேடுதலையும் கைது செய்தலையும் தாமதப்படுத்தி, சுவிஸ் குமாரை தப்பிக்க விடுவது.

• இதற்கூடாக சுவிஸ் ரஞ்சனுக்கு நெருக்குதலை உண்டாக்கி, அவருக்குள்ள சமூக அந்தஸ்த்தை கெடுப்பதினூடாக புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் செயற்பாட்டை இடை நிறுத்துவது.

• கடந்த தேர்தல் முடிவுகளால் அரசியல் அநாதையாய் இருப்பவர்கள் இந்த சம்பவத்தை பயன்படுத்தி தங்கள் அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்வது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வழக்கு விசாரணைகள் முடியும் வரையில் சற்று பொருத்திருப்போம்..

முதன் முதலாக இந்தக் கீழ்த்தரமான செயற்பாட்டை “முகமறியா கட்டுரை வடிவில்” முன்னெடுத்தவர் அதே எமதூர் புங்குடுதீவு நண்பர் ஒருவராகத் தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதனை உடனடியாக பிரசுரித்து தவறான கருத்தை பரவ விட்டவர்கள் “செத்த வீட்டு” இணையமான (அதாவது செத்த வீட்டை வைத்து பிழைப்பை நடத்தும்) லங்காஸ்ரீ குழுமம் தான்.

ஆயினும், இதனை தொடர்ச்சியாக முன்னெடுத்தவர்கள், அரசியல் காரணங்களுக்காகவும், பழிவாங்கும் காரணங்களுக்காகவுமே பல்வேறு அரசியல் மட்டத்தில் இருந்தவர்கள் என்பது அவதானிக்கப்பட வேண்டிய காரணியாகும்.

அதுமட்டுமல்லாது, தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்ட சுவிஸ் குமாருக்குப் பதிலாக போடப்பட்ட சுவிஸ்ரஞ்சன் நிற்கும் படத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்களின் படமும் இருப்பதை அவதானித்து பகிரப்பட்டது மேலும் சிக்கலாக்கியது. அதாவது வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக புளொட் தலைவருக்கு பெருகியுள்ள மக்கள் ஆதரவு தளத்தை சிதைக்கும் நோக்கமாகவே இதை கருத வேண்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வித்தியாவின் படுகொலையில் “தான் இருந்தால் இப்படி நடந்திருக்காது” என்று அரசியல் இலாபம் தேடியது ஒருபக்கமிருக்க, மறுபக்கத்தில் சுவிஸ்ரஞ்சன் மகிந்தவுடன் இருந்த படத்தை வைத்து சரத் பொன்சேகா போன்றவர்கள் “இது மகிந்தவின் சதி” என்று அரசியல் செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இவ்வாறு குற்றம் திணிக்கப்படுவதின் நகைச்சுவை என்னவென்றால் சுவிஸ்ரஞ்சன் பிரபலமான, சமூகச் செயற்பாடுகள் கொண்ட பலராலும் அறியப்பட்ட, சமூக அரசியல் செயற்பாட்டுத் தளங்களில் பங்கு கொள்பவர். சுவிஸ் நாட்டில் நாளாந்தம் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருபவர். இவர் சுவிற்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் உப தலைவரும், ஊடகப் பொறுப்பாளரும் ஆவார் என்பதை சுவிஸ் மற்றும் புங்குடுதீவை கடந்து, முழு உலகும் அறியும் வண்ணம் இலவச விளம்பரத்தையும் செய்துள்ளார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய காரணமாகும்.

1. சுவிஸ்ரஞ்சன் மீதும், புளொட் தலைவர் மீதும் பழி தீர்க்கக் காரணம் என்ன?
2. சுவிஸ் குமாருக்கு ஆதரவாக செயல்பட்டவர்களின் உண்மை நோக்கம் என்ன?
3. இதற்கு தரகராக செயற்பட்டவர்கள் யார்?
4. எவ்வளவு தொகை பணம் பரிமாறப்பட்டது?
5. இவர்களுக்கு பின்புலமாக செயல்பட்ட யாழ், கிளிநொச்சி அரசியல்வாதி யார்?
6. வட அரசியல்வாதியை யாராவது தென் இலங்கை அரசியல்வாதிகள் இயக்குகிறார்களா?…

போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் போது தான்.. வித்தியா படுகொலையின் சூத்திரங்கள் வெளிவரும். அப்பொழுதுதான் உண்மையான குற்றவாளிகளை இனம்காண முடியும்.

எனவே “காரணங்கள் இல்லாமல், காரியங்கள் நடைபெறவில்லை” என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்..!!

-புங்கையூரான்-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மத்திய பிரதேசத்தில் மதிய உணவில் முட்டையை சேர்க்க முதல்–மந்திரி எதிர்ப்பு!!
Next post ஜீன்ஸ்- டி சர்ட் அணிந்துக்கொண்டு வேலைக்கு வரலாம்: இன்போசிஸ் சி.இ.ஓ. அதிரடி உத்தரவு!!