அதிகாரிகள் சோதனையில் 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்!!
Read Time:1 Minute, 6 Second
திண்டுக்கல் நகர் முழுவதும் துப்புரவு ஆய்வாளர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அதாவது வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, கச்சேரி தெரு, மெயின் ரோடு, அரசமரவீதி உள்ளிட்ட பகுதியில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.,
அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பிளாஸ்டிக் பை, டம்ளர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் திண்டுக்கல் நகர் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையோர பழக்கடைகள், மளிகை, பூ மற்றும் ஓட்டல்கள், கடைகளில் இதுபோன்ற பிளாஸ்டிக் பைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இனியும் இது போன்று விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Average Rating