5 வயது சிறுமிக்கடுத்து 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மனித மிருகத்திற்கு மரணதண்டனை!!

Read Time:2 Minute, 3 Second

2912ca6b-ffd6-46f4-a880-f9a80d671176_S_secvpfமத்திய பிரதேச மாநிலத்தின் நிபானியா என்ற கிராமத்திலிருந்து எட்டு வயது சிறுமியைக் கடத்திச் சென்று, துளியும் மனசாட்சியின்றி அந்தப் பிஞ்சுக்குழந்தையைக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த ரமேஷ் வர்மாவுக்கு(30) மரணதண்டனை விதித்து அம்மாநில கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்திற்கு முன்பாக, 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஷஜாபூர் மாவட்ட நீதிமன்றம் இந்த மனித மிருகத்திற்கு 5 வருடம் சிறை தண்டனை விதித்தது. ஒரே நாளில் ஒரு சிறுமியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட இந்த மிருகம், 5 வருட தண்டனை முடிந்து சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்தது.

தான் செய்த தவறை நினைத்து துளியும் குற்ற உணர்ச்சி கொள்ளாத இந்த மிருகம் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி இந்த 8 வயது சிறுமியையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. கீழ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

இதுபோன்ற வக்கிர குணம் கொண்டவர்களை போதிய சிகிச்சை (கவுன்சிலிங்) அளித்த பிறகே சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோயாளியின் நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்த 7 கிலோ கட்டியை போராடி அகற்றிய மருத்துவர்கள்!!
Next post அதிகாரிகள் சோதனையில் 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்!!