ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்!!
Read Time:1 Minute, 22 Second
அரியானா மாநிலத்தின் ஜிண்ட் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு நாளை நடைபெறவிருந்த திருமணத்தை போலீசார் இன்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக உள்ளூர்வாசிகள் தெரிவித்த தகவலையடுத்து, மாவட்ட அதிகாரிகளுடன் விரைந்துவந்த போலீசார், அந்த மணமகனின் பிறப்புச் சான்றிதழை வாங்கி சோதித்தபோது அவனுக்கு 16 வயதுதான் ஆகின்றது என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மணமகளின் வீட்டாரை தொடர்பு கொண்ட போலீசார், அந்த சிறுவன் இன்னும் திருமண வயதை எட்டவில்லை. எனவே, உங்கள் பெண்ணை அவனுக்கு மணம்முடித்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்தனர்.
பின்னர், அந்த மாணவனுக்கு திருமணத்துக்கு தேவையான வயது ஆகும்வரை திருமண ஏற்பாடு செய்வதில்லை என இருவீட்டாரிடமும் உறுதிமொழி எழுதி வாங்கிக் கொண்ட போலீசார், நாளை நடைபெறவிருந்த இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
Average Rating