யோகா தினத்தை தொடர்ந்து ரக்ஷா பந்தன் விழாவையும் விமரிசையாக கொண்டாட மத்திய அரசு திட்டம்?
Read Time:56 Second
டெல்லியில் கடந்த 21-ம் தேதி முதலாவது சர்வதேச யோகா தினத்தை மிக சிறப்பான வகையில் கொண்டாடியதுபோல், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘ரக்ஷாபந்தன்’ விழாவையும் வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, இவ்விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பான திட்டங்களை வகுத்தளிக்கும் பொறுப்பு 4 மத்திய மந்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Average Rating