கடும் வறுமையால் 3 மாத பெண் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ரெயில் முன் பாய்ந்த பெற்றோர்!!
ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட உணவின்றி கடும் வறுமையில் வாடிய பெற்றோர் தங்களது 3 மாத பெண் குழந்தையை அனாதையாக்கிவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கல் நெஞ்சையும் கரைய வைத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரைச் சேர்ந்த ஜாகித், தன் குடும்பத்தின் கடும் வறுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் கடந்த திங்களன்று, பரானா ரெயில்வே சந்திப்பிற்கு அருகே உள்ள ரெயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். கணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்ட அவரது மனைவி ரூபியும் அதே இடத்திற்குச் சென்று அவரைப் போலவே ரெயில் முன் பாய்ந்து, தன் உயிரையும் மாய்த்துக்கொண்டார்.
ரூபி தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனது 3 மாத பெண் குழந்தையை தண்டவாளத்திலிருந்து சற்று தூரம் தள்ளி விட்டுச் சென்றார். தனக்கு நேர்ந்த சோகத்தை அறியாமல் வீறிட்டு அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையை கண்டெடுத்த ரெயில்வே போலீசார், அக்குழந்தையின் தாத்தா, பாட்டியிடம் அதனை ஒப்படைத்தனர்.
Average Rating