சேலத்தில் சலூன் கடைக்காரர் கொலை: கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

Read Time:7 Minute, 30 Second

af6f45f2-e69c-463d-944c-a86d8bbc4f96_S_secvpfசேலம் ஜாகீர் அம்மாப்பாளையம் ராசிநகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 41). இவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சுந்தரி (வயது 35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலகிருஷ்ணன் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை பாண்டுரங்கன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பாலகிருஷ்ணனை தேடிவந்தனர். சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் பாலகிருஷ்ணன் குறித்து விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில் பாலகிருஷ்ணனின் மனைவி சுந்தரி, அவர் குடியிருந்து வந்த வீட்டு உரிமையாளர் லோகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் தாவிக்குமார், தேவன் ஆகியோருடன் சேர்ந்து பாலகிருஷ்ணனை கொன்று பிணத்தை புதைத்தது தெரியவந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26–ந்தேதி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த பாலகிருஷ்ணனை சுந்தரி, கள்ளக்காதலன் உள்பட 4பேரும் சேர்ந்து வெட்டி கொன்றனர். பின்னர் அவரது உடலை பிரிட்ஜில் அடைத்து வைத்தனர். சில நாட்கள் கழித்து பாலகிருஷ்ணன் உடலை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் புதைத்தனர். இச்சம்பவம் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், சுந்தரி உள்பட 4பேரை போலீசார் கைது செய்தனர். சேலத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைதான சுந்தரி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதில் அவர் கூறியதாவது:–

என் கணவர் ஜாகீர் அம்மாப்பாளையத்தில் 2 இடங்களில் முடிதிருத்தும் கடை வைத்து இருந்தார். முடி வெட்டுவதில் அவர் கைத்தேர்ந்தவர். போலீசார் முதல் அதிகாரிகள் வரை என் கணவரின் கடைக்கு வந்து முடி வெட்டி செல்வார்கள். நாங்கள் சாஸ்திரி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அப்போது வீட்டு உரிமையாளரின் மகன் லோகு என்கிற லோகநாதனுக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி உல்லாசமாக இருந்து வந்தோம், இந்த நிலையில் எனது கணவருக்கு உடல் நிலை பாதித்தது. அவருக்கு உப்பு வியாதி ஏற்பட்டு உடல் எடை குறைந்து வந்தது. இதனால் அவரை பார்க்கவே அறுவறுப்பாக இருந்தது. இரவில் என்னுடன் படுக்க அவரை விடமாட்டேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

நாங்கள் குடியிருந்த மாடி வீட்டில் 2 வாசல்கள் இருந்தது. நானும், லோகநாதனும் வீட்டுக்குள் உல்லாசமாக இருப்போம். அப்போது என் கணவர் வந்து கதவை தட்டினால் மற்றொரு வழியாக லோகநாதன் வெளியே சென்று விடுவார். இப்படி நாங்கள் ஒரு நாள் உல்லாசமாக இருந்ததை என் கணவர் பார்த்து விட்டார். இதில் கோபம் அடைந்த அவர், தினமும் மது குடித்து விட்டு வந்து என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார். ஒரு நாள் எனக்கும், என் கணவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் கோபம் அடைந்து என்னை கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கூறி மிரட்டினார். இதில் நான் அதிர்ச்சி அடைந்தேன். கள்ளக்காதலை கைவிட கூறி எனது கணவர் மிரட்டி வந்ததால் அவரை கொலை செய்து விட லோகநாதனிடம் கூறினேன். அதற்கு அவரும் சம்மதித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 26–ந்தேதி இரவு என் கணவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது லோகநாதன் என் கணவரின் பின் மண்டையில் அடித்து கொலை செய்தார். பிறகு உடலை இரண்டாக வெட்டி சாக்குப்பையில் போட்டு பிரிட்ஜில் வைத்து விட்டார். மறுநாள் வீட்டு வளாகத்தில் செப்டிக் டேங்க் கட்டுவதாக கூறி 6அடி பள்ளம் தோண்டி நண்பர்களுடன் சேர்ந்து என் கணவரின் உடலை அதில் புதைத்தார். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என லோகநாதன் தெரிவித்து இருந்தார்.

இதனால் நான் யாரிடமும் கூறாமல் இருந்தேன். என் கணவர் எங்கே என உறவினர்கள் கேட்ட போது அவர் கோவிலுக்கு சென்றுள்ளார் என தெரிவித்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன் என் மாமியார் மாரியம்மாள் இறந்து விட்டார். இதனால் நானும், என் குழந்தைகள் சாவிற்கு சென்றோம். அப்போது உறவினர்கள் என் கணவர் குறித்து கேட்டு தகராறு செய்தனர். பிறகு இதுபற்றி என் மாமனார் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். இது பற்றி நான் லோகநாதனிடம் தெரிவித்தேன். இதனால் அவர் புதைத்த என் கணவரின் உடலை தோண்டி எடுத்து எங்கோ வீசி விட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக தெரிகிறது.

சுந்தரி மற்றும் கள்ளக்காதலனிடம் தனிப்படை போலீசார் இன்று 2–வது நாளாக விசாரணை நடத்தினர். இன்று பிற்பகலில் கைதான 4பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

சலூன் கடைக்காரர் கொலை செய்யப்பட்டு உடல் மறைத்த வழக்கில் துப்பு துலக்கிய துணை கமிஷனர்கள் செல்வராஜன், பிரபாகரன், சூரமங்கலம் உதவி கமிஷனர் விஜய் கார்த்திக் ராஜ், இன்ஸ்பெக்டர் குமரேசன், சப்–இன்ஸ்பெக்டர்கள் வடிவேல், ராமமூர்த்தி, பாரதி ராஜா, ஏட்டுக்கள் முருகன், முருகேசன், ராஜப்பன், சக்தி மற்றும் போலீசார் தனிப்படை போலீசாரை சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல் மனைவிக்கு தெரியாமல் 2–வது திருமணம்: பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை!!
Next post ஆலங்குடி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 2 ஆசிரியர்கள் இடமாற்றம்!!