முதல் மனைவிக்கு தெரியாமல் 2–வது திருமணம்: பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை!!

Read Time:1 Minute, 44 Second

dc71c5e8-5651-46f1-80bb-eebdd2cc30bd_S_secvpfராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மள்ளார்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்ற பீட்டர் (வயது42). அந்த பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இவருக்கும் சாத்தூர் அருகே பி.லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாப்பா (42) என்பவருக்கும் 1996–ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. ஒரு ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்தின் போது 20 பவுன் நகை மற்றும் சீர்வரிசையாக வழங்கப்பட்டன. இதில் 20 பவுன் நகையை பீட்டர் அடமானம் வைத்து செலவு செய்ததார். நகையை திருப்பி கேட்டதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கமுதியை சேர்ந்த வனிதா என்ற அருள் ஞானவனிதாவை பீட்டர் 2–வது திருமணம் செய்துள்ளார்.

இது குறித்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முத்துப்பாப்பா புகார் செய்தார். இந்த வழக்கு சாத்தூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர், பள்ளி ஆசிரியர் பீட்டருக்கு 3 வருட சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆத்தூர் அருகே காதலி கண் முன் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்ட காதலன்!!
Next post சேலத்தில் சலூன் கடைக்காரர் கொலை: கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!