கற்பழிப்பு முயற்சி தோல்வியில் உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட நான்கு பேர் கும்பல்!!
இளம்பெண்ணை கற்பழிக்கும் முயற்சி தோல்விடைந்த கோபத்தில் உறவினர்களை துப்பாக்கியால் சுட்ட கொடூரம் உத்தரபிரதேத்தில் நடைபெற்றுள்ளது.
இங்குள்ள டேவால் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் வயல்வெளியில் புல் அறுக்க வென்றார். அப்போது நான்கு வாலிபர்கள் அவரை வழிமறித்து கற்பழிக்க முயற்சி செய்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு அந்த பெண்ணின் மாமா மற்றும் அத்தை வந்தனர்.
அவர்கள் இருவரும் அங்கு நடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவர்களிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தங்களது திட்டம் நிறைவேறாமல் போன கோபத்தில் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாம்செர் அலி, ஜாவெத், காலித், சமான் ஆகியோரை தேடி வருகின்றனர். குண்டு காயம்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Average Rating