நாகர்கோவில் அருகே 8–ம் வகுப்பு மாணவியிடம் ஈவ்டீசிங்: மாணவர் உள்பட 2 பேர் கைது!!

Read Time:2 Minute, 15 Second

5e003f18-1d42-44e7-ac4b-4c6a97df7058_S_secvpfநாகர்கோவில் அருகே உள்ள மேலசூரங்குடியைச் சேர்ந்த ஒரு மாணவி வல்லன்குமாரன்விளை அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் மாணவியின் சகோதரர் 6–ம் வகுப்பு படிக்கிறார்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவியும், அவரது சகோதரரும் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். கீழமறவன்குடியிருப்பு பகுதியில் அவர்கள் சென்றபோது 3 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

அவர்கள் மாணவியை கிண்டல் செய்தபடியே பின்தொடர்ந்து சென்றனர். அதற்கு மாணவியும், அவரது சகோதரரும் எதிர்ப்பு தெரிவித்து வாலிபர்களை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் மாணவியின் சைக்கிளை கீழே தள்ளினர். இதில் மாணவி தரையில் விழுந்தார். உடனே 3 வாலிபர்களும் அவர் அருகில் சென்று தகாத வார்த்தைகளை பேசி மோசமாக நடந்து கொண்டனர்.

உடனே மாணவி சத்தம் போட்டு அழுதார். இதனால் வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீட்டுக்கு சென்ற மாணவி நடந்த சம்பவம் பற்றி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

மாணவியை ஈவ்டீசிங் செய்ததாக மேலமறவன் குடியிருப்பை சேர்ந்த மைக்கேல் என்ற ஜெனித் (18), விமல் ராஜ் (15), ஜஸ்டின் அனித் ஆகிய 3 பேர் மீது சப்–இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்தார். இவர்களில் மைக்கேல், விமல்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். விமல்ராஜ் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேரூர் இரட்டை கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சென்னையில் கைது!!
Next post உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் சிறப்பான உணவுகள்..!!