புதுக்கோட்டை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்!!
Read Time:1 Minute, 11 Second
புதுக்கோட்டை அருகே நடந்த சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நீர் பழனியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(வயது 32). இவர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த 30.8.2014–ல் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இது குறித்து கீரனூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் விசாரணை செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிச்சம்மாள் குற்றவாளி வெள்ளைச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Average Rating