தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த ராணுவ வீரர்!!

Read Time:1 Minute, 24 Second

83ccda36-54f5-4ae8-a0ee-f0d3bdd3a950_S_secvpfஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நாய்க் கோகுல குமார். இவர் காஷ்மீரில் உள்ள ஷாதா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். இதனிடையே நேற்று இரவு தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மூலம் கோகுல குமார் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ராணுவ வீரர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த கோகுல குமாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ராணுவ வீரரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுக்கோட்டை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்!!
Next post உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்!!