முதுகுளத்தூர் அருகே பிளஸ்–2 மாணவி கடத்தல்: காதலன் கைது!!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சின்னஆனையூரைச் சேர்ந்தவர் முனியசாமி–கொடிமலர். இவர்களது மகள் முத்துராசாத்தி (வயது 18). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
இந்த நிலையில் முத்து ராசாத்தி அதே பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (23) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு முத்துராசாத்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருக்கு திருமணம் செய்யவும் ஏற்பாடுகள் செய்தனர்.
சம்பவத்தன்று அலெக்ஸ் பாண்டியன், முத்து ராசாத்தியை கடத்தி சென்று விட்டதாக அவரது தாய் மாமன் பெருமாள் பேரையூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்லமணி வழக்குப்பதிவு செய்து பிளஸ்–2 மாணவியை கடத்திய அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தார். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் கருப்பசாமி, மூர்த்தி, முனியசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating