செல்பி வித் டாட்டர் கட்டுரை: திக்விஜய் சிங் தோழியுடன் இருந்த புகைப்படத்தை நீக்கியது நியூயார்க் டைம்ஸ்!!

Read Time:2 Minute, 42 Second

d488379d-f1c5-4d8c-9d9b-0ebc3fd5493b_S_secvpfபிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்பி வித் டாட்டர் பிரச்சாரம் குறித்து வெளியிட்ட கட்டுரையில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தனது தோழியுடன் உள்ள புகைப்படத்தை நீக்கியுள்ளது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ‘செல்பி வித் டாட்டர்’ பிரச்சாரம் குறித்த செய்தியை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டிருந்தது. அந்த செய்தியுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் அவரது தோழியும் பிரபல பத்திரிகையாளருமான அமிர்தாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் தவறுதலாக வெளியிட்டுள்ளது.

இது, கடந்த ஓராண்டுக்கு முன்பாக பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம் ஆகும். மோடியின் செல்பி வித் டாட்டர் பிரச்சாரத்தையடுத்து #selfiewithDaughter ஹேஷ்டேகுடன் ஒருவர் இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார். அதில் செல்பி வித் டாட்டர் என்பதை(திக் விஜய்சிங்) செல்பி வித் கேர்ள்பிரண்ட் என தவறாக புரிந்துகொண்டுள்ளார் என்று எழுதியுள்ளார்.

ஆனால், இந்த விமர்சனத்தை கவனிக்காத நியூயார்க் டைம்ஸ் வழக்கமாக மகளுடன் தந்தை எடுத்துக்கொண்ட பல்வேறு செல்பி புகைப்படங்களுடன் திக்விஜய் சிங், அமிர்தா புகைப்படத்தையும் சேர்த்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த புகைப்படத்தை நீக்கியுள்ள நியூயார்க் டைம்ஸ், “இந்த கட்டுரை தொடர்பாக நாம் முன்பு வெளியிட்ட புகைப்படத்தில் இந்திய அரசியல்வாதியுடன் இருப்பது அவரது மகள் அல்ல. இந்த தவறுக்காக வருந்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு!!
Next post ஊட்டி பங்களாவில் முதியவர் கொலை: ஓரினச்சேர்க்கையின்போது துன்புறுத்தியதால் கொன்றேன் – வாலிபர் வாக்குமூலம்!!