MSVயின் நிலை கவலைக்கிடம் – டாக்டர்கள் தீவிர சிகிச்சை!!
Read Time:1 Minute, 17 Second
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வாரங்களுக்கு முன் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்தார்கள். இதையடுத்து அவரது உடல்நிலை சீரானது. இசையமைப்பாளர் இளையராஜா நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதனை வீட்டுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால், உடல்நிலை திடீரென மோசமடைந்தது. நினைவுகளை இழந்தார். இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆனாலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார். உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடுகிறார்கள்.
திரையுலகினரும், குடும்பத்தினரும் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating