தன் காதல் பற்றி சொல்லும் நித்யாமேனன்….!!
தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்து பிரபலமானவர் நித்யாமேனன். வெப்பம், ஜே,கே. எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
நித்யாமேனன் பற்றி வதந்திகளும் பரவுகின்றன. இயக்குனர்களை மதிப்பது இல்லை என்றும் மற்றவர்களிடம் கோபத்தில் எரிந்து விழுகிறார் என்றும் காதலில் சிக்கியுள்ளார் என்றும் கிசுகிசுக்கள் பரவுகின்றன.
இதற்கு நித்யாமேனன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: என்னை பற்றி தவறான வதந்திகள் பரவுகின்றன. நான் இயக்குனர்களுக்கு மரியாதை கொடுக்கிறேன். யாரிடமும் கோபப்படுவதும் இல்லை. நிறைய இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்ல வருகிறார்கள். பிடித்த கதைகளில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.
எனக்கு 18 வயதில் காதல் வந்தது. கல்லூரியில் படித்தபோது காதலித்தேன். ஆனால் இப்போது யாரையும் நான் காதலிக்கவில்லை. தனியாக சந்தோஷமாக இருக்கிறேன். நான் நடித்த படங்கள் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது பற்றி யோசிக்கமாட்டேன். என் கேரக்டர் சிறப்பாக வர முழு உழைப்பையும் கொடுப்பேன். வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் ஏற்றுக்கொள்வேன். இவ்வாறு நித்யாமேனன் கூறினார்.
Average Rating