9–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: விடுதி காப்பாளரின் கணவர் கைது!!
ஆந்திர மாநிலம் சித்தூர் கொங்காரெட்டிபள்ளி பகுதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர், அங்குள்ள ஒரு அரசு விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். அவருடன் ஏராளமான மாணவிகளும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
விடுதி காப்பாளராக ஒரு பெண் பணியாற்றி வருகிறார். அவர் தன்னுடைய கணவருடன் அதே விடுதியின் ஒரு பகுதியில் தங்கி குடும்பம் நடத்தி வருகிறார்.
அந்த விடுதி காப்பாளர், அங்கு தங்கி படித்து வரும் மாணவிகளை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதை, சாதகமாக பயன்படுத்தி கொண்ட விடுதி காப்பாளரின் கணவர் சாமுல் (வயது 45), பல மாணவிகளை பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் யாரும் இல்லாத நேரத்தில் விடுதிக்கு வந்த சாமுல், அந்த மாணவியை வலுக்கட்டாயமாக தனி அறைக்கு அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவரத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் அவர், அந்த மாணவியை மிரட்டியதாக தெரிகிறது.
பாதிக்கப்பட்ட அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை அதே விடுதி தலைமை காப்பாளரான சுரேஷிடம் புகார் செய்தார். அவர், இதுபற்றி சித்தூர் 1–டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சாமுலை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
Average Rating