13 வயது சிறுமியை 40 பேர் கற்பழித்த கொடூரம்: உடந்தையாக இருந்த தாய் உள்பட 12 பேர் கைது!!

Read Time:3 Minute, 3 Second

c214a5a5-4fdf-4800-a54e-fca3e887340c_S_secvpfகேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது கணவனுடன் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய தாய் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இங்குள்ள ஒரு பள்ளிக்கு குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் சமீபத்தில் வந்திருந்தனர். பிற ஆண்களிடம் எப்படி பழக வேண்டும்?. பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகாமலிருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? என்பது தொடர்பாக ஆறாம் வகுப்பு மாணவிகளிடையே அவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

அப்போது, ஒரு 13 வயது சிறுமி அந்த பணியாளர்களிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்தாள். தனது தாயார் இரண்டாவதாக ஒரு நபரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது துணையுடன் தன்னை கடந்த இரண்டாண்டுகளாக பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், தாயின் இரண்டாவது கணவரின் மகன் உள்பட சுமார் 40 பேர் இதுவரை தன்னை கற்பழித்து, சீரழித்ததாகவும் அந்த சிறுமி கண்ணீருடன் தெரிவித்தார்.

தற்போது, ஆறாம் வகுப்பு மாணவியாக இருக்கும் இவளுக்கு இந்த நிலை என்றால், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவள் நான்காம் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோதே பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார், அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில் இந்த பிஞ்சு வயதில் அவள் பலரால் சீரழிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து, சிறுமியின் தாயார், அவளது இரண்டாவது கணவன், அவரது மகன் உள்பட இதுவரை 12 பேரை கைது செய்துள்ள போலீசார், மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவர் மீதும் இளம்சிறார் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கோழிக்கோட்டில் உள்ள சிறார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிர்வாணமான பிரபல விளையாட்டு வீரர்கள் (VIDEO+PHOTOS)!!
Next post திருமணம் செய்வதாக கூறி பெண் போலீஸ் பாலியல் பலாத்காரம்!!