திருமணம் செய்வதாக கூறி பெண் போலீஸ் பாலியல் பலாத்காரம்!!
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் போலீஸை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காசிராம் பச்சோலே என்ற போலீஸ்காரர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவருக்கும் போபாலில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஸ்டெனோவாக வேலைபார்க்கும் பெண் போலீஸ் ஒருவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது. திருமணம் செய்துகொள்வதாகக் கூறி காசிராம் அந்த பெண் போலீஸை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே காசிராம் பச்சோலே தன்னை திருமணம் செய்து கொள்ளாததால், விரக்தியடைந்த அந்த பெண், இது குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சலீம் கானிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காசிராம் பச்சோலே மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்ய சலீம் கான் உத்தரவிட்டார். பெண் போலீசுக்கு நடைபெற்ற இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating