ராயக்கோட்டை அருகே இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை: கணவர் வெறிச்செயல்!!

Read Time:5 Minute, 5 Second

d099a45d-9dee-434c-b076-cf56e8f653a3_S_secvpfகிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியில் உள்ள பாஞ்சாலி நகரை சேர்ந்தவர் முருகன். இவரும், இவரது மனைவி ஜெயாவும் மொத்தமாக பாத்திரங்களை கொள்முதல் செய்து, அதனை வெளியூர்களுக்கு சென்று விற்பனை செய்து வந்தனர். இவர்களது மகள் ஸ்ரீமதி (வயது 22).

மகள் ஸ்ரீமதியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கோடியூர் பகுதியை சேர்ந்த அருள் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு மேகநாதன்(2), கவுதம் (1) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், கணவர் அருளுக்கு குடிப்பழக்கம் உள்ளதை மனைவி ஸ்ரீமதி தெரிந்து கொண்டார். மது குடித்து விட்டு வந்து மனைவி ஸ்ரீமதியிடம் அவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கணவன்– மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் அவர் வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் அருள் சந்தேக எண்ணம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து உதைத்து வந்துள்ளார்.

இதனால் பயந்துபோன இளம்பெண் ஸ்ரீமதி தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு பாஞ்சாலி நகரில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்தார். அங்கு 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

மனைவியை மீண்டும் குடும்ப நடத்த வருமாறு அருள் அழைத்துள்ளார். ஆனால் அவர் பயந்ததால் கணவருடன் செல்ல மறுத்து விட்டார்.

இந்த நிலையில், வழக்கம் போல் ஸ்ரீமதியின் தந்தை முருகனும், தாயார் ஜெயாவும் பாத்திரம் வியாபாரம் செய்ய வெளியூருக்கு சென்று விட்டனர். இரவு வெகுநேரம் ஆனதால் வீட்டிற்கு செல்ல தாமதம் ஆகும் என கருதி அவர்கள் 2 பேரும் வெளியூரிலேயே தங்கி விட்டனர்.

வீட்டில் ஸ்ரீமதியும், அவருடைய தங்கை உஷாவும் மற்றும் 2 குழந்தைகளும் வீட்டில் இரவு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

அதிகாலை 3.30 மணியளவில் அருள் பாஞ்சாலி நகருக்கு வந்தார். மனைவி தூங்கிக்கொண்டிருந்த வீட்டின் அறையின் பின்பக்கம் சென்று வீட்டின் மேல் கூரையில் ஏறினார். நைசாக வீட்டின் ஓட்டை பிரித்து வீட்டுக்குள் இறங்கினார்.

தூங்கிக்கொண்டிருந்த மனைவி ஸ்ரீமதியின் அருகே அருள் சென்றார். அவர் கையில் வைத்திருந்த கூர்மையான கத்தியால் ஸ்ரீமதியின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்தார். கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியே வந்தது.

மனைவி என்றும் பாராமல் துடிதுடிக்க மனைவியின் கழுத்தை அருள் அறுத்தார். அப்போது அவர் வலி தாங்க முடியாமல் அழுதார். அவரது அழுகுரல் சத்தத்தை கேட்டதும் அருகில் தூங்கிக்கொண்டிருந்த தங்கை உஷா எழுந்தார்.

அப்போது, ஸ்ரீமதியின் கழுத்தை அருள் அறுத்துக்கொண்டிருந்ததை உஷா பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவர் கூச்சல் போட்டார். உடனே அங்கிருந்து அருள் தப்பிச்சென்று விட்டார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளம்பெண் ஸ்ரீமதியை, தங்கை உஷா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இச்சம்பவம் குறித்து ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப்–இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தப்பி ஓடிய அருளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டுக்கல் அருகே பூச்சூடி பொட்டு வைத்த விதவை பெண்கள்!!
Next post தொடரும் அக்கிரமம்: மற்றொரு சிறுவனை மது குடிக்க வைக்கும் வாட்ஸ்அப் வீடியோ காட்சியால் பரபரப்பு!!