தொடரும் அக்கிரமம்: மற்றொரு சிறுவனை மது குடிக்க வைக்கும் வாட்ஸ்அப் வீடியோ காட்சியால் பரபரப்பு!!
திருவண்ணாமலை அருகே 4 வயது சிறுவனை மது குடிக்க வைத்து வேடிக்கை பார்த்த கொடுமையான காட்சிகள் சமீபத்தில் ‘வாட்ஸ்அப்’பில் பரவியது. இந்த சம்பவம் அனைவரையும் கொதிப்படைய வைத்தது.
இந்நிலையில் இதேபோல் மற்றொரு சம்பவம் வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. வீடியோ காட்சியானது சுமார் 2 நிமிடம் 15 விநாடிகள் வரை ஓடுகிறது.
காட்சியில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவனுக்கு அவனது தந்தை சம்மதத்துடன் மதுகுடிக்க கற்றுக் கொடுப்பது போன்று அமைந்து உள்ளது. வீடியோவில் சிறுவனை மது குடிக்க வைத்து அருகில் இருப்பவர்கள் பேசும் வட்டார மொழி தென்மாவட்டத்தை சேர்ந்தவர்களின் பேச்சு வழக்குபோல் உள்ளது என்று கூறப்படுகிறது. எனவே தென்மாவட்ட பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சியின் கீழே vidTrim என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை தொடங்கி உள்ளது.
Average Rating