திருமங்கலம் அருகே ராணுவ வீரர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக்கட்டியது அம்பலம்!!

Read Time:3 Minute, 39 Second

651a498f-9db0-48b2-9b8b-ef7cd865e34b_S_secvpfமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகம் முனியாண்டிபுரம் காட்டுப் பகுதியில் பிச்சைமணி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு கடந்த மாதம் (ஜூன்) 19–ந்தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

உடல் கிடந்த இடத்தில் இருந்து 100 அடி தூரத்திற்கு அப்பால், தலை தனியாக கிடந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் திருமங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளர் சசிமோகன், இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று தலை மற்றும் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? எனத் தெரியாத நிலையில், அவரது புகைப்படம் தென் மாவட்ட போலீசாருக்கும் அனுப்பப்பட்டன. அவர்கள் கொலை செய்யப்பட்டவர் புகைப்படத்தை போஸ்டராக ஒட்டி விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கொலை செய்யப்பட்டவர், திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகே உள்ள வீராணம்பட்டியை சேர்ந்த மாயழகு (வயது 52) என தெரியவந்தது. ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவருக்கு, பூபதி என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் போலீஸ்காரராக உள்ளார். இளைய மகன் ராணுவ வீரராக உள்ளார். மகள் பிளஸ்–2 படித்து வருகிறார்.

இவர்களில் மூத்த மகனுக்கு மட்டும் திருமணமாகி உள்ளது. இந்த நிலையில் மாயழகுவின் மனைவி பூபதிக்கும், தொட்டியபட்டியை சேர்ந்த பெத்தணன் (45) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனை மாயழகு கண்டித்தபோதும், கடந்த 10 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு நீடித்தது. இதனால் மாயழகு அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது அவதூறாக பேசியதால், பூபதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பெத்தணனுடன் பேசிய அவர், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதன்படி மாயழகுவிடம் நைசாக பேசி அவருக்கு அளவுக்கு அதிகமாக மதுவை பூபதியும், பெத்தணனும் கொடுத்தார்களாம். பின்னர் அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி முனியாண்டிபுரம் காட்டுப்பகுதியில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தலையை தனியாக வீசிச்சென்றுள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் விரைந்து செயல்பட்டு பூபதி மற்றும் பெத்தணனை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS)நடிகைகளின் படங்கள் பல!!
Next post சிவகங்கை அருகே உறவினரின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்த 2 பேர் கைது!!