(PHOTOS)வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற வீரமக்கள் தினம்!!

Read Time:2 Minute, 48 Second

unnamed (16)கடந்த 30 வருட ஆயுத போராட்டத்தில் உயிர் நீத்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் போராளிகள் பொதுமக்கள் ஆதரவாளர்களின் நினைவாக தொடர்ந்து நான்கு நாட்களாக அனுஸ்டிக்கப்பட்டு வந்த 26 வது வீரமக்கள் தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை கோவில் குளத்தில் அமைந்துள்ள அமரர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் நடைபெற்றது.

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் வடமாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நினைவுச் சுடரினை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஏற்றியதை தொடர்ந்து உயிர்த் தியாகம் செய்த போராளிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், கட்சி உறுப்பினர்கள்ஈ ஆதரவாளர்கள் சுடரினை ஏற்றிவைத்தனர்.

அதனை தொடர்ந்து உயிர்த்தியாகம் செய்த போராளிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயிர்த்தியாகம் செய்த பெற்றோர் உறவினர்கள் இறந்த பிள்ளைகளை நினைவுகூர்ந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதன் போது கவிஞர் மாணிக்கம் ஜெகனின் புரட்சிக் கவிதை ஒன்றும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வடமாகாண சபை உறுப்பினரும் வன்னியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான க.சிவநேசன் (பவான்), மாவட்ட இணைப்பாளரும் முன்னாள் வவுனியா நகரசபையின் உபநகர பிதாவாகிய க.சந்திரகுலசிங்கம் (மோகன்) கழகத்தின் வன்னி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்கிளப்பு, திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
unnamed (11)

unnamed (12)

unnamed (13)

unnamed (14)

unnamed (15)

unnamed (16)

unnamed (17)

unnamed (18)

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையர் ஒருவர் இந்தியாவில் போதைப்பொருளுடன் கைது!!
Next post மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கையை வெளியிட நீதிமன்றம் தடை!