ஐதேமு – சிவில் அமைப்புக்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை!!

Read Time:1 Minute, 32 Second

693260926ranilநல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் 75 சிவில் அமைப்புக்கள் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளன.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் உட்பட்ட 75 பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவர்.

இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று முற்பகல் 9.30க்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் செய்துக்கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் இரண்டாம்படி உடன்படிக்கையாக இது அமைந்துள்ளது.

இதில் முக்கியமாக 19வது திருத்தத்தின் கீழ் சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்க வேண்டும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்தல் உட்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட ஐவர் சுதந்திர கட்சியில் இருந்து நீக்கம்!!!
Next post ஐமசுகூ தேர்தல் விஞ்ஞாபனம் இன்று: அனுர – ஜனாதிபதி சந்திப்பு!!