இரும்புச்சத்து குறைவினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்..!!!

Read Time:3 Minute, 4 Second

timthumb (12)உடலில் நோயெதிர்ப்பு சக்தி வலிமையோடு இருப்பதற்கு, சில உலோகங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதில் முக்கியமான காரணிகளின் ஒன்று இரும்புச்சத்து ஆகும்.

உடலில் இரும்புச்சத்து குறைவினால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சோர்வு

உடலில் சோர்வு அதிகம் இருந்தால், அதற்கு முதன்மையான காரணம் இரும்புச்சத்து குறைபாடு ஆகும். இதன் குறைபாட்டினால், ஓக்சிசன் உடலில் குறைந்து, ஆற்றல் குறைபாடு ஏற்படுகிறது. அதிலும் சிறு வேலை செய்தால் கூட மிகுந்த சோர்வு ஏற்படும்.

மூச்சுவிடுவதில் சிரமம்
மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால், ஒன்று நுரையீரல் பிரச்சனையாக இருக்கும் அல்லது இரும்புச்சத்து குறைபாடாக இருக்கும்.

அதிகப்படியான இரத்தப்போக்கு
மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு அளவுக்கு அதிகம் ஏற்பட்டால், அதற்கு காரணமும் இரும்புச்சத்து குறைபாடு ஆகும்.

தசை வலி
உங்கள் தசைகளில் அடிக்கடி எரிச்சலுடன் கூடிய வலி ஏற்படுகிறதா? அதுவும் உடற்பயிற்சி செய்த பின் கூட இம்மாதிரியான வலி ஏற்படலாம். அப்படியெனில், உங்களின் உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

வெளிரிய சருமம்
கன்னங்கள், உதட்டின் உள்ளே மற்றும் கண் இமைகளுக்கு அடிப்பகுதியில் உங்கள் சருமம் வெளிரிப் போயிருந்தால், வைத்தியரை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று அர்த்தம்.

தலைவலி
நீங்கள் கடுமையான தலைவலியை பல நாட்களாக உணர்ந்து வந்தால், இரும்புச்சத்து குறைபாட்டினால் உங்கள் மூளைக்கு போதிய ஓக்சிசன் கிடைப்பதில்லை என்று அர்த்தம். எனவே நீங்கள் அடிக்கடி தலைவலியால் கஷ்டப்பட்டால் வைத்தியரை உடனே சந்தியுங்கள்.

பதற்றம்
பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படக்கூடும். ஆனால் பதற்றமானது நரம்புகளினால் ஏற்படுவது. நீங்கள் சமீப காலமாக அதிகமாக பதற்றமடைந்தால், உங்களின் இரும்புச்சத்தின் அளவை பரிசோதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் உங்கள் இதயம் போதிய ஓக்சிசன் கிடைக்காததால், வேகமாக துடித்து, அதனால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, பதற்றம் ஏற்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையின் முடிவுக்கு பிரித்தானியா வரவேற்பு!!
Next post “உடையாற்ற திருவிழாவிலை, சடையனும் காவடியாம்..” தேய்த்த வளவுக்காறர் – ஸ.கோனார்!!