“உடையாற்ற திருவிழாவிலை, சடையனும் காவடியாம்..” தேய்த்த வளவுக்காறர் – ஸ.கோனார்!!

Read Time:9 Minute, 36 Second

timthumb (13)ஆவணி மாதம் காவடிக் காலம், ஆடம்பரக்காறன் நல்லூர் கந்தனுக்கும், அன்னதானக் கந்தன் சந்நிதியனுக்கும் ஆயிரம் ஆயிரம் காவடிகள், யாழ்ப்பாண தெருவெல்லாம் வகை வகையாய் காவடிகள்.

இதே ஆவணியிலை இந்த முறை வந்த தேர்தல் திருவிழாவுக்கும் கனபேர் காவடி எடுத்தவை. இதிலை கொஞ்சப் பேர் தான் ஆட்டத்தை முடிச்சு மிகுந்த பக்தியோடை(யாம்) ஒழுங்கா இறக்கி வைச்சவை.

கூட்டமைப்புக் காவடி கொழும்பில கோலாகலமாக போய் இறங்கினாலும், இரவோடை இரவாய் இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றுவன் எண்டு வெளிக்கிட்ட சுரேஸ் தம்பியை மக்கள் கழட்டிவிட , அவற்றை காவடி கட்டப்பிராய்க்கை அமந்து போச்சு.

எங்கள் காவடி ஒற்றுமையின் சின்னம் எமது ஆட்டம் கூட்டு ஆட்டம் எண்டகூட்டமைப்புக்காரர் இப்ப ஆளையாள் திட்டிக் கொண்டு திரியினம். சுரேஸ் தம்பியும், அதிபர் அருந்தவபாலனும் தங்கள் வெற்றியை சப்றா சரவணபவன் தட்டிப் பறிச்சுப் போட்டார் எண்டு கூப்பாடு போடினம்.

உடையாற்ற திருவிழாவிலை சடையனும் காவடியாம் எண்ட கணக்கில இந்த முறை கொஞ்சப் பேர் புதுசா தேர்தல் காவடியை தூக்கிச்சினம். அவை மீது சனத்துக்கு இருந்த கவனிப்பும், அடித்த விசிலும் இனி வாழ்க்கையிலை எண்டைக்கும் அவையை இந்த காவடியைப்பற்றி சிந்திக்கவே விடாது எண்டுதான் நினைக்க வைக்குது.

கூட்டமைப்புக் காவடியின்ர தலையான் ஆட்டக்காறர் சம்பந்தர் ஐயா பெரும் மேள, தாளங்களோட எதிர்க்கட்சி தலைவர் கந்தோரிலை காவடியை இறக்கி வைச்சுள்ளார். அவர் இல்லாட்டால், தையிலை போராட்டம் என மேடை அதிர அறிவிச்ச மாவை அண்ணன்தான் எதிர்க்கட்சி தலைவர் எண்டும் முடிவாப்போச்சாம். இண்டைக்கு முப்பத்தெட்டு வரிசத்திற்கு முந்தி எங்கட அண்ணன் அமிர்தலிங்கமும் அடைந்தால் தமிழீழம் இல்லையேல் சுடுகாடு எண்டுபோட்டுத்தான் உந்த எதிர்க்கட்சி தலைவர் அறையுக்கை போனவர்.

அப்பவும் யு.என்.பி.தான், இப்பவும் யு.என்.பி.தான் ஆட்சி. கிழட்டு நரி எண்டு சொல்லப்பட்டஜே.ஆர். ஜெயவர்த்தனா அண்டைக்கு ஜனாதிபதி, அவற்ற மருமோன் ரணில் விக்ரமசிங்க இண்டைக்கு பிரதமர். இப்பவும் அடுத்த வருசம் ஆவணிக்கு முந்தி தமிழருக்கு தீர்வு, அதுவும் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சித்தீர்வு எண்டு சொல்லிக் காவடி எடுத்துப்போட்டுத்தான் சம்பந்தர் ஐயா எதிர்கட்சித் தலைவர் ஆகியிருக்கிறார்;. என்னதான் நடக்கப் போகுதெண்டு கொஞ்சம் பொறுத்திருந்துதான் பாக்கவேணும்.

ஆயிரத்து தொளாயிரத்து நாற்பத்தியெட்டில ‘போத்தல’ வளவு பெரிய சேனநாயக்க காலத்திலை துவங்கிய தமிழற்றை உரிமைப்பறிப்பு அவற்ற மோன் டட்லி சேனநாயக்க காலத்தில் இன்னமும் வளர்ந்தது. அப்பதான் மலைநாட்டு சகோதரங்களுடைய வாக்குரிமையை இல்லாமல் செய்தானுகள். இந்தக் கொடுமைக்கு ஆதரவாய் எங்கட காங்கேயர். கந்தர். பொன்ம்பலமும்(ஜீ.ஜீ) நாடாளமன்றத்திலை கையைத் தூக்கினது தான் கொடுமையிலும் கொடுமை. அவற்றை பேரன்தான் இப்ப ஒருநாடு இருதேசம் எண்ட புதுப் பாட்டோடை காவடி ஆடினவர்.

பிறகு ஐம்பத்தாறில ‘ஹொறக்கொல்ல’ வளவுக்காரர் பண்டாரநாயக்க, தனது பங்குக்கு சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து எங்கண்ட மொழியுரிமையை அழிச்சானுகள். கடைசியா ‘மெதமுல்லான’ வளவுக்காரர் மகிந்த ராஜபக்சவின்ர ஆட்சியிலும் ஒண்டும் நடக்கேலை. ஆனா அந்த ஆட்சிக் காலத்திலைதான் மக்கள் யுத்தமில்லா பூமியை தரிசிக்க முடிஞ்சது. எல்லா வளவுக்காறரும் அப்பப்ப எங்களை தேய்க்க எங்கட யாழ்பாணத்துக்காறரும் அதை வைச்சுக்கொண்டு தங்களை வளர்த்துக் கொண்டதுதான் வரலாறு.

இப்ப ரணிலும்,மைத்திரியும் சேர்ந்து தேசிய அரசாங்கமாம் அதிலை எங்கண்ட சம்பந்தர் ஐயாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியாம். இலங்கையின்றை வரலாற்றில முதல் முறையாக எதிர்க்கட்சி ஒண்டு ஆளும் கட்சியாகவும் இருக்கப் போவது இதுவாகத்தான் இருக்கப் போகுது.

இதுக்கிள்ள எலக்சனுக்கிள்ள புகைஞ்சு கொண்டிருந்த சங்கதி ஒண்டு இப்ப நெருப்புப் பத்தி எரியத்தொடங்கியிருக்கு. மாகாண சபை(தமிழர் அரசு) முதல்வர் விக்கி ஐயா எலக்சனில கூட்டமைப்புக்கு எதிரா கருத்துக்களைச் சொன்னார் எண்டும் ஆனால், மக்கள் அவரை நிராகரிச்சுப் போட்டினம் எண்டும் மாவை சேனாதிராசா வவுனியாவில முழங்கியிருக்கிறார்.

அதோடை வடக்கு மாகாண சபையை கலைக்க வேணு மெண்டு ரணில் ஐயாவும் சம்பந்தர் ஐயாவும் சேர்ந்து இரகசியாமாய் யோசிக்கினம் எண்டும் ஒரு பரகசிய செய்தி.

நீதவான் ஐயா புது அணியொண்டை உருவாக்கப் போவதாகவும் அரசல் புரசலா யாழ்பாணத்திலை ஒரு கதை. இதுக்கு ஆதரவா சரவணபவனின் யாழ்பாணத்து உதயனுக்கு ஆப்புவைத்துக் கொண்டிருக்கும் வலம்புரி பத்திரிகை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்குது.

இது ஒருபுறமிருக்க சுரேஸ் தம்பி, ரெலோவையும், புளொட்டையும் துணைக்கழைத்துக் கொண்டு தமிழரசுக் கட்சிக்கு எதிராய் போர்க் கொடி தூக்க, ரெலோ அடைக்கலநாதனுக்கு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் என்னும் அமைச்சர் அந்தஸ்துப் பதவியை ரணிலிட்டை வாங்கிக் குடுத்து சுரேசை வாலைச்சுருட்ட வைத்திருக்கிறார் கொழும்புக்காறர் சுமந்திரன்.

இம்முறை எலக்சனில கூட்டமைப்புக்கு பெரிய வெற்றி எண்டு சொல்லியினம். ஆனால் எப்பிடி ஒரு விளக்கு அணையும் பொழுது, சுடர்விட்டு அணைகிறதோ.. அதுபோல இப்ப கிடைச்ச வெற்றி கூட்டமைப்பின்ரை கடைசிச்சுடர் எண்டும் பேசப்படுகிறது.

அதுக்கை சுரேஸ் தம்பி இல்லை எண்டால் தமிழற்ற பிரச்சினையை உலகத்துக்கு வடிவா எடுத்துச் சொல்லுறதுக்கு ஆளில்லை எண்டு அவற்ற ஆதரவாளர்கள் ஒரு புலுடாவையும் அவிட்டு விட்டிருக்கினம். பாவம் சுரேஸ் தம்பி அவற்ற ஊடகப் பேச்சாளர் பதவியும் போய் சோர்ந்து திரியிறார்..

இவனுகள் அப்பப்ப பகவத்கீதை படிக்கவேணும். பகவத்கீதை புத்தகத்தை இப்ப தேடித் திரியத் தேவையில்லை. அந்தியெட்டி வீட்டுக்குப் போனால் தாற கல்வெட்டு புத்தகத்தில அதுதான் கிடக்குது. ‘நீ இல்லை எண்டால் இன்னொருவன் அந்த இடத்துக்கு வருவான், எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கப் போகிறதோ அது நன்றாகவே நடக்கும்’. இது போன்ற கண்ணனின் உபதேசங்களை எண்ணிக்கொண்டு இருக்க வேண்டியதுதான் சுரேஸ் போன்றவர்கள்..

மக்களுக்கு தொண்டு வேண்டுமெண்டால் எலக்சனில வெல்ல வைக்க வேணும் இல்லையெண்டால் ஒண்டுமில்லை எண்டு எங்கட ஆக்கள் நினைக்கிறதிலை இருந்தே தெரியுதே இவங்கட சுய உருவம். அண்ணல் காந்தி, நெல்சன் மண்டேலா, தந்தை பெரியார் போன்றவர்கள் எலக்சனிலை வெண்டுதான் மாமனிதர்கள் ஆனார்களோ….?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரும்புச்சத்து குறைவினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்..!!!
Next post சட்டவிரோதமாக ஒரு தொகை மருந்துகளை நாட்டுக்கு கொண்டுவந்தவர் சிக்கினார்!!