தினமும் ஒரு டம்ளர் ப்ளாக் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!!

Read Time:3 Minute, 36 Second

09-1468060503-4-heartwomenசிலருக்கு ப்ளாக் டீ மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் உலகிர் ஏராளமானோர் ப்ளாக் டீயைத் தான் விரும்பி குடிக்கிறார்கள்.

அப்படி ப்ளாக் டீயை விரும்பி குடிப்பவர்களுக்கு, அதை அதிகம் பருகுவது நல்லதா கெட்டதா என்ற சந்தேகம் மனதில் எழும்.

அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை ஒரு நல்ல தெளிவைக் கொடுக்கும். ஏனெனில் இங்கு தினமும் ஒரு டம்ளர் ப்ளாக் டீயைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் அச்சமின்றி ப்ளாக் டீயை ரசித்து ருசித்து பருகுங்கள்.

நீரிழிவு

ப்ளாக் டீயை தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால், நீரிழிவு வருவதற்கான அபாயம் குறையும்.

செரிமானம் மேம்படும்

ப்ளாக் டீயில் டேனின்கள் அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. எனவே உங்கள் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட தினமும் ஒரு டம்ளர் ப்ளாக் டீ குடிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

புற்றுநோய்

ப்ளாக் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் இருக்கும். எனவே இதனை தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால், குறிப்பிட்ட புற்றுநோய் உருவாவதைத் தடுக்கலாம்.

இதய ஆரோக்கியம் மேம்படும்

ப்ளாக் டீயை தொடர்ந்து பருகி வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பல் ஆரோக்கியம்

ப்ளாக் டீ பற்களில் ப்ளேக் உருவாக்கத்தைத் தடுக்கும் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் பல் சொத்தையாவதைத் தடுக்கும்.

வலிமையான எலும்புகள்

ப்ளாக் டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், எலும்புகள் வலிமையடைவதோடு, அதில் உள்ள பைட்டோ கெமிக்கல்களால் ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

எடை குறையும்

உடல் எடையால் கஷ்டப்படுபவர்கள், ப்ளாக் டீயை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள குறைவான சோடியம் மற்றும் கலோரியால் உடல் பருமனடைவது குறையும்.

சருமத்திற்கு நல்லது

ப்ளாக் டீயில் வைட்டமின் பி2, சி, ஈ, கனிமச்சத்துக்களான மக்னீசியம், பொட்டாசியம், ஜிங்க் போன்றவையும், பாலிஃபீனால்கள் மற்றும் டேனின் போன்ற சருமத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன.

தலைமுடிக்கு நல்லது

ப்ளாக் டீயில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் காப்ஃபைன் போன்ற தலைமுடிக்கு தேவையான உட்பொருட்கள் உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் தனியாகச் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த இருவருக்கு நடந்த கதி…!!
Next post பாலக்காடு அருகே ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து தாய்- மகனுக்கு அரிவாள் வெட்டு: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்…!!