நக்சலைட்டுகளுக்கு உதவிய சென்னை என்ஜினீயர் கைது கேரளாவில் பிடிபட்டார்

Read Time:4 Minute, 7 Second

நக்சலைட்டுகளுக்கு உதவியாக செயல்பட்ட சென்னை என்ஜினீயர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். தேடுதல் வேட்டை மக்கள் போராட்ட குழு என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர் மல்லராஜ ரெட்டி சில தினங்களுக்கு முன் கேரளாவில் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அவர் மேலும் சில தீவிரவாதிகள் கேரளா மற்றும் தமிழக எல்லைப்பகுதிகளில் பதுங்கி இருப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கேரளாவில் நக்சலைட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தேனி, கம்பம் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளிலும் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை என்ஜினீயர் கைது இந்த நிலையில் கொச்சியில் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக தீவிரவாதத்தை தூண்டும் கருத்துகள் அடங்கிய புத்தகங்கள் அச்சிட்டு ஒருவர் வினியோகிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துறை வடக்குகோட்டை வாசல் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் குட்டி (வயது 60) என்பதும், சென்னையில் பிறந்தவர் என்பதும் தெரியவந்தது.

சென்னையில் படித்து டிப்ளமோ பட்டம் பெற்ற இவர் 1974 முதல் 83 வரை திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவில் வேலை பார்த்துள்ளார். பின்னர் வேலையை விட்டு நீக்கப்பட்ட கோவிந்தன் குட்டி ஆந்திராவில் மனநிலை பாதிக்கப்பட்டதற்காக சிகிச்சை பெற்று இருக்கிறார்.

மனைவியை கொன்றவர்

அதன்பிறகு மனைவி மற்றும் உறவினர்களை கொன்றதற்காக ஆயுள்தண்டனை பெற்று ஆந்திர சிறையில் இருந்த போது மக்கள் போர்குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து விடுதலையான பிறகு கேரளா திரும்பி தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறார்.

மேற்கண்ட விவரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறையில் அடைப்பு

தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கோவிந்தன்குட்டி கைது செய்யப்பட்டு இருப்பதாக, திருக்காக்கரை போலீஸ் உதவி கமிஷனர் சேதுமாதவன் தெரிவித்தார். `பீப்பிள்ஸ் மார்ச்’ என்ற பத்திரிகை வாயிலாக, நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக தீவிர வாதத்தை தூண்டும் கொள்கைகளை கோவிந்தன் குட்டி பிரசுரித்து வந்தாகவும், இன்டர்நெட் வாயிலாகவும் இந்த கருத்துக்களை அவர் பரப்பி வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட போது, நக்சலைட்டுகள் கொள்கையில் தான் உறுதியாக இருப்பதாகவும், இதற்காக சிறையில் அடைத்தாலும் கவலை இல்லை என்று கோவிந்தன் குட்டி போலீசாரிடம் தெரிவித்துள்ளான். கைதான கோவிந்தன் குட்டியை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிடிச்சிருக்கு விழாவில் பி.சுசீலா கலகலப்பு -காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ஹீரோ.!!!
Next post விரும்பியவர்களுக்கு மனைவியாக இருக்க பெண்களை கடத்தி வாடகைக்கு விட்டார்: துணை நடிகை கைது