சூழலைக் காக்க இலவசமாக பயன்தரு மரங்கள் விநியோகிப்பு…!!

Read Time:3 Minute, 8 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (5)பயன்படுத்தப்படாமல் பாழடைந்து காணப்படும் நிலத்தை பயன்படுத்தி நன்மையடைய வேண்டும் என ஏறாவூர் நகர பிரதேச செயலக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகஸ்தர் மல்லிகா தாஹிர் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலக காணிப் பயன்பாட்டுப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராம காணிப் பயன்பாட்டு விழிப்புணர்வுக் கூட்டம் ஏறாவூர் முஹாஜிரீன் கிராமத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

நிலத்தை வெறுமனே பராமரிக்காது விட்டு விடுவதால் அது பிரயோசனமற்று விடுவதோடு சூழலுக்கும் தீங்காய் அமைந்து விடுகின்றது. எனவே நிலத்தை உச்சமட்டத்தில் பயன்படுத்தி அதன் மூலம் சுற்றுச்சூழலை தூய்மையாகப் பேணுவதோடு பொருளாதார வளத்தையும் ஈட்டிக் கொள்ளலாம்.

நிலத்தை தூய்மையாக்குவதன் மூலம் கொடிய உயிர்க்கொல்லி நோயிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம். இந்தத் திட்டம் இன்றோ அல்லது நாளையோ முடிந்து விடப் போவதில்லை. இதனை நல்ல முறையில் அமுல்படுத்தினால் அதன் மூலம் வீட்டுப் பொருளாதாரமும் ஆரோக்கியமும் சூழலின் தரமும் நாட்டின் பொருளாதாரமும் மேம்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் நாம் தெரிவு செய்துள்ள ஒவ்வொரு வீடுகளும் வீட்டுச் சுற்றாடலிலுள்ள நிலமும் ஜீபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படுகின்றது.

எனவே இந்தத் திட்டத்தின் மூலம் குறிப்பாக கிராம மக்கள் சிறந்த பயனைப் பெறவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் மல்லிகா தாஹிர் குறிப்பிட்டார்.

இதே வேளை குறித்த நிகழ்வின் போது பயனாளிகளுக்கு பயன்தரும் நீண்ட கால மற்றும் குறுகிய கால மரங்களும் இயற்கை பசளையும் இலவசமாக விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதையில் மிதந்தவர்களால் கோயிலில் சாமிக்கு நேர்ந்த கொடுமை…!! வீடியோ
Next post தினமும் காலையில் தியானம் செய்யுங்கள்…!!