சிறுநீரகத்தை சீர்செய்யும் மூக்கிரட்டை கீரை…!!

Read Time:5 Minute, 39 Second

201607040748011101_kidney-problem-control-mookirattai-keerai_secvpf-585x333உடல் ஆரோக்கியத்திற்கு மூலிகைகள் அடிப்படையாக இருக்கின்றன. கீரை களையும் மூலிகை என்றே சொல்லலாம். கீரை வகைகளில் ஒன்று மூக்கிரட்டை. இதற்கு மூக்கரட்டை கீரை என்ற பெயரும் உண்டு. இது சாலையோரங்களிலும், வயல் வரப்புகளிலும் சாதாரண கொடி போன்று படர்ந்து வளரும்.
இந்த கீரையில் ஏராளமான மருத்துவ வேதியியல் பொருட்கள் உள்ளன. உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, உடல் கழிவுகளை வெளியேற்ற இது உதவுகின்றது.

இந்த கீரை இலைகளின் மேல் பகுதி பச்சையாகவும், கீழ் பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். ஊதா நிறத்தில் பூக்கும். இதில் இன்னொரு வகை வெள்ளை நிறத்தில் பூக்கும். இந்த இரண்டு வகையின் இலை, வேர் போன்றவை உணவாகவும், மருந்தாகவும் பயன்படு கிறது.
மூக்கிரட்டை கீரைக்கு ‘புணர்னவா’ என்ற பெயரும் உண்டு. ‘புணர்’ என்றால் மீண்டும் என்று பொருள். ‘நவா’ என்றால் புதிது என்று பொருள். நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, உடலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி தருவ தால் இந்த பெயர்.

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் பணியில் குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரக கழிவுகளை சிறந்த முறையில் வெளியேற்றி நீண்ட ஆயுளை இது தருகிறது.
மூக்கிரட்டை காரச் சத்து கொண்டது. கசப்பு சுவை உடையது. வெப்பத் தன்மையை பெற்றிருக்கிறது.
மூக்கிரட்டை இலையை உணவாகவோ, மருந்தாகவோ உட்கொண்டால் உடலில் உள்ள வாத நோய்கள் பெட்டியில் அடைபட்ட பாம்பை போல அடங்கி விடும்! இது உடலில் அதிகரிக்கும் வாதம், கபத்தை சீர்செய்யும் தன்மையும் கொண்டது.

ரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், பாத வீக்கம், மூச்சிறைப்பினை போக்க இதன் இலைகளை சமைத்து சாப்பிடவேண்டும். மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் நீர் தேங்கி வயிறு பெருத்துகாணப்படும். அதனை மூக்கிரட்டை குணப்படுத்தும்.

ஒவ்வாமை காரணமாக உடலில் நமைச்சல் உண்டாகும். அதற்கு மூக்கிரட்டையை பயன்படுத்தலாம். 10 கிராம் மூக்கிரட்டை வேரை நசுக்கி, 100 மி.லி. நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி, அதில் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் கலந்து பருகவேண்டும். இருமுறை இதை பருகுவது நல்லது.
ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களால் உடலில் நீர் தேங்கும். அதனால் மூச்சுத்திணறல் தோன்றும். சளித் தொல்லையும் அதிகரிக்கும்.

10 கிராம் வேரை 100 மி.லி. நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, அரை தேக்கரண்டி மிளகு தூள் கலந்து குடித்தால் மூச்சுத் திணறல் நீங்கும்.

அனைத்து விதமான சிறுநீரக நோய்களுக்கும் மூக்கிரட்டை முக்கிய மருந்தாகின்றது. சிறுநீரக செயல் இழப்பை தடுக்க உதவுகின்றது. ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை குறைக்க உதவுகின்றது. சிறுநீர் தடையை நீக்குவது இதன் முக்கியபண்பு.

சிறுநீரக பாதிப்படைந்தவர்கள் மூக்கிரட்டை வேரை 10 கிராம் அளவுக்கு எடுத்து, 100 மி.லி நீரில் கலந்து, அத்துடன் அரை தேக்கரண்டி சோம்பு சேர்த்து குடிநீராக பருகவேண்டும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். பக்கவிளைவுகள் ஏற்படாது. வேருக்கு மலமிளக்கும் தன்மை இருப்பதால், வயிற்றுக் கழிச்சல் அதிகமாக இருக்கும். சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் இது கரைக்கும்.

மூக்கிரட்டையின் வேர் நீண்டு தடித்து கிழங்கு போன்று காணப்படும். காய்ந்த வேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதில் இருந்து ரத்த சோகை, சிறுநீரகநோய்கள், கல்லீரல், இதயம், சுவாச நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனிதனின் கண்ணுக்குள் இவ்வளவு அழுக்கு இருக்கா?… பார்த்தால் அதிர்ந்து போவீங்க…!! வீடியோ
Next post வீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா?