உங்கள் முக அமைப்புக்கு பொருத்தமான ஹேர்ஸ்டைல்கள் எது…!!

Read Time:4 Minute, 10 Second

hairstyle_001-w245அழகு என்பது வெறும் முக அமைப்பு மற்றும் சரும நிறம் சார்ந்ததல்ல. பிறரை வசீகரிக்கும் அளவிற்கு அழகு இல்லையென்றாலும் சிறு அழகு குறிப்புகளை பயன்படுத்தி நாம் எப்படி நமது அம்சங்களை மாற்றிகொள்கிறோம் என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது.

அந்த வகையில் பெரும்பான்மையான பெண்கள் தவறு செய்வது அவர்களின் சிகை அலங்காரத்தில் தான். நமது ஒவ்வொருவரின் முகமும் வெவ்வேறு அமைப்புகளை உடையது. அதில் பெரும்பாலான பிரிவுகளாக கருதப்படுபவை, வட்ட வடிவ முகம், நீள்வட்ட வடிவ முகம், சதுர வடிவ முகம் ஆகியவை.

பெண்கள் தங்களின் முக வடிவங்களுக்கு ஏற்றவகையில் சிகை அலங்காரத்தை தேர்வு செய்வது அவசியம்.அந்தவகையில் பெண்களுக்கு உதவும் எளிமையான டிப்ஸ்களை தொடர்ந்து படியுங்கள்.

நீள்வட்ட முகம் உடையவர்கள்…

நீள்வட்ட முகமுடைய பெண்களுக்கு பெரும்பாலான சிகை அலங்காரங்கள் நன்றாகவே இருக்கும். ஃப்ரீ ஹேர், போனி டைல் போன்ற ஹேர்ஸ்டைல்கள் மிக எடுப்பாக இருக்கும். ஆனால் நீள்வட்ட முகமுடையவர்கள் தங்களின் தலையில் நடு வாகு எடுப்பதை தவிர்த்துவிடவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீளமாக இருப்பது போல தோன்றுவது மட்டுமில்லாமல் அவர்களது மூக்கையும் சற்று பெரியதாக காட்டிவிடும்.

சதுர முக வடிவம் உடையவர்கள்…

நீங்கள் சதுர முக வடிவமுடையர்கள் என்றால் உங்களக்கு நீளமான கூந்தல் மிக கச்சிதமாக பொருந்தும். கூந்தலை பின்பக்கமாக உயர்த்தி கட்டாமல், முகத்தில் கூந்தலின் இழைகள் விழும்படி பார்த்துகொள்ளுங்கள். போனி டைல் போன்ற சிகை அலங்காரங்களை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் குட்டை முடி பிரியராக இருந்தால் லேயர் லேயராக பாப் கட் செய்துகொள்ளலாம். ஆனால், கூந்தலை குட்டையாக வெட்டும் போது முடியை மொத்தமாக ஓரே அளவில் வெட்டினால் அது உங்களுக்கு ஒரு அடாவடி லுக்கை கொடுத்துவிடும்.

வட்ட முக வடிவம் உடையவர்கள்…

வட்ட முகமுடையவர்கள் அனைவரும் குண்டாக இருப்பார்கள் என அர்த்தமில்லை. உங்களின் கன்னங்களில் நிறைய சதை இருந்தால் நீங்கள் உங்களின் தோள்கள் அளவிற்கு முடியை லேயர் கட் செய்துகொள்ளலாம். உங்களுக்கு சுருட்டை முடி இருந்தால் அதை ஸ்ரேட்னிங் செய்யலாம். இப்படி செய்யும்போது உங்களின் முகம் சற்று நீளமாக தோன்றும். எந்த வகையான சிகை அலங்காரம் செய்தாலும் கூந்தலை மேலே தூக்கி சீவுங்கள்.

இந்த எளிமையான குறிப்புகளை பின்பற்றி உங்களின் தோற்றத்தை படிப்படியாக மெருகேற்றுங்கள்

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தல 57-ல் இணைந்த பிரபல காமெடி நடிகர்…!!
Next post ஜே.கே.ரித்தீஷ் தயாரிக்கும் தப்பாட்டம்…!!