By 25 September 2016 0 Comments

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகும் விஜய் ஹீரோயின்?

201609241807595784_keerthy-suresh-pair-with-allu-arjun_secvpfதெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் லிங்குசாமி இயக்கத்தில் நேரடித் தமிழ்ப்படமொன்றில் நடிக்கவுள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

இந்நிலையில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதால் அல்லு அர்ஜுன் படத்திற்கு கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்திட வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கூறப்படுகிறது.

‘தொடரி’ யைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் விஜய் ஜோடியாக பைரவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்திருக்கும் ’ரெமோ’ திரைப்படம் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகிறது. ’ரஜினிமுருகன்’ படத்துக்குப் பின் சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக இப்படத்தில் சேர்ந்து நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.



Post a Comment

Protected by WP Anti Spam