புளூட்டோவின் கிரக அந்தஸ்து பறிப்பு: வானியல் அறிஞரின் மனைவி அதிர்ச்சி

Read Time:2 Minute, 13 Second

Pluto.jpgசூரியனைச் சுற்றும் கிரகங்களின் பட்டியலில் இருந்து புளூட்டோ தகுதி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்ததாக, அதை கண்டுபிடித்த வானியல் அறிஞரின் மனைவி தெரிவித்தார். புளூட்டோ என்பது கிரகமல்ல. அது சூரியனைச் சுற்றி தனக்கென்று தனியாக பாதை அமைத்திருக்கவில்லை. அது நெப்டியூனின் சுற்றுவட்டப் பாதைக்குள் வருகிறது. எனவே அதை கிரகமாக ஏற்கமுடியாது என சர்வதேச வானியல் அறிஞர்கள் மாநாடு முடிவெடுத்து அறிவித்தது.

1930 ம் ஆண்டுதான் புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்டது. அரிúஸôனாவில் உள்ள வானியல் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து கிளைடி டோம்பக் என்ற 24 வயது வானியல் நிபுணர் புளூட்டோவை கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர். ஆகஸ்ட் 24 ம் தேதியுடன் புளூட்டோவின் கிரக அந்தஸ்த்து பறிக்கப்பட்டது.

அதைக் கண்டுபிடித்தவர் 1997 ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது மனைவிக்கு தற்போது 93 வயதாகிறது. புளூட்டோவின் அந்தஸ்த்து பறிக்கப்பட்டது குறித்து அவரிடம் தொலைபேசி மூலம் கருத்துக் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து அவர் கூறியது: வானியல் அறிஞர்களின் முடிவைக் கேட்டவுடன் நான் நொறுங்கிப் போய்விடவில்லை. ஆனால் சிறிது அதிர்ச்சி அடைந்தேன். புளூட்டோ தற்போது சுற்றும் பகுதியான குய்பெர் பெல்ட் பகுதியில் அதைப்போன்ற ஏராளமான பருப்பொருள்கள் சுற்றுவதை கண்டுபிடித்துள்ளனர். எனவே வானியல் அறிஞர்களின் முடிவு சரிதான் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெரும்பான்மையான கனேடியத் தமிழர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்களே…
Next post பாகிஸ்தானில் ராணுவம்-பழங்குடியினர் மோதல்: 60 பேர் பலி