By 31 March 2017 0 Comments

உடல் நலனை பேணும் காய்கறிகள்..!!

201703300831518029_vegetables-Maintain-body_SECVPFஉணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பலன் தருகிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. இதில் பெரும் பாலானவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களே அதிகம். அதில் சில காய்கறிகளின் பயனை காணலாம்.

முருங்கைக்காய்:- ஆண்களின் விந்துவை விருத்தி செய்யும். பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

சுரைக்காய்:- உடல் சோர்வை நீக்கும். வயிற்றில் கொழுப்பை கரைக்கும்.

உருளைக்கிழங்கு:- மலச்சிக்கலை போக்கும்.

வாழைத்தண்டு:- சிறுநீர் பாதையில் கல் அகற்றும்.

வாழைப்பூ:- மலச்சிக்கலை போக்கும்.

வாழைக்காய்:- ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.

குடை மிளகாய்:- அஜீரணத்தை போக்கும்.

சவ்சவ்:- எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

வெண்டைக்காய்:- மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

கோவைக்காய்:- வாய், நாக்கு புண்களை குணப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு:- எலும்பு, பற்களை உறுதிப்படுத்தும்.

எனவேதான், உணவே மருந்து என நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam