வங்கிகளில் ரூ.2720 கோடி மோசடி: “பலே” இந்தியருக்குத் தண்டனை

Read Time:2 Minute, 12 Second

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வங்கிகளில் ரூ. 2720 கோடி மோசடி செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் குறைந்த தண்டனையோடு தப்பிவிட்டார். அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு அளித்த சிறை தண்டனை வெறும் 7 மாதங்கள் தான். இந்தத் தண்டனையைக் கூட ஏற்கெனவே அனுபவித்துவிட்டதால், அவர் கையை வீசிக் கொண்டு ஜாலியாக சிறையிலிருந்து வெளியேறிவிட்டார். சிறை தண்டனை குறைவாக இருந்தாலும் அவர் மோசடி செய்த பணத்தைவிட அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்த அபராதத் தொகை ரூ. 2734 கோடி. இந்த மோடி மன்னன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் ஆனந்த. உலோக நிறுவனமான ஐஎன்சி-யின் நிதி அதிகாரியாகப் பணியாற்றினார். இந்த நிறுவனத்தை வெளிநாட்டு வாழ் இந்திய சகோதரர்கள் நரேந்திர ரஸ்தோகி, வீரேந்திர ரஸ்தோகி ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த மூவரும் கூட்டுச் சேர்ந்து உலோக வர்த்தகம் பெருமளவு நடப்பதுபோல் போலி ஆவணங்களைத் தயாரித்து அதன் மூலம் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகியவற்றில் உள்ள பல வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தனர். இந்த மோசடிகளில் மூளையாகச் செயல்பட்டவர் தான் அனில் ஆனந்த். அவர் செய்த குற்றங்களுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் விசாரணையில் போலீஸôருடன் ஒத்துழைத்தார். அவர் கொடுத்த விவரங்களைக் கொண்டு இந்த வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அவர் பெரிய தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளுடன் மீண்டும் பேச்சுக்குத் தயார்: இலங்கை அரசு அறிவிப்பு
Next post மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவு வாபஸ்: மாயாவதி அறிவிப்பு