கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பிக்கப்பட்ட பொங்கல் விழா…!!(வீடியோ
மன்னாரில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் இன்றைய தினம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், சிறப்பு திருப்பலியும் இடம்பெற்றுள்ளது.
குறித்த பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள் என பல்வேறு இடங்களிலும் பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.