ஜனாதிபதி பாதுகாப்பு ஹெலிகொப்டர் சுடப்பட்டமை தொடர்பில் விசாரணை
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த ஹெலிகொப்டருக்கு கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் வின்கொமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார். அருகம்பே பாலத்திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் கொழும்புக்கு வரும்போதே பாதுகாப்பு வழங்குவதற்கு வந்திருந்த பெல்412 ரக ஹெலிகொப்டர் கஞ்சிக்குடிச்சாறு பகுதியினூடாக பறந்து கொண்டிருக்கையில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது இதுதொடர்பில் விஷேட பொலிஸ் குழுவை கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.