கல்முனையில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் பலி
இன்றுகாலை 8.30மணியளவில் மாவத்தகம பிரதேசத்திலிருந்து கல்முனைக்கு வந்து கொணடிருந்த மெத்தை வியாபாரம் செய்யும் சிங்கள வர்த்தகர்கள் மூவர் மீதே ஆயுததாரிகளின் துப்பாக்கிப் சூடு நடத்தினர் இச்சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் லொறியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த வேலை கல்முனை புஹாரி வீதியில் வைத்து இவர்கள்மீது ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். 22, 23, 24 வயதுகளையுடைய இளைஞர்கள் எனவும் தெரிவித்தார்.