பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

Read Time:1 Minute, 31 Second

பிரிட்டனில் தஞ்சம் கோரியிருந்த தமிழ் அகதி ஒருவரை இலங்கை திருப்பியனுப்புவதற்காக செய்யப்பட்ட முயற்சிகளை எதிர்த்து அந்த அகதி மேற்கொண்டுவந்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் முடிவு தெரிவித்துள்ளது. பெயர் வெளியிடப்படாத இந்தத் இலங்கைத் தமிழ் அகதி, தான் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு விடுதலைப் புலிகளாலும் இலங்கை இராணுவத்தாலும் மோசமாக நடத்தப்படலாமென்று தான் அஞ்சுவதாக வாதிட்டிருந்தார். விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்காக இலங்கை இராணுவம் சித்ரவதையை ஒரு உத்தியாகக் கையாள்கிறது என்பதாகக் குறிப்பிட்டு; அவ்விவகாரத்தை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொண்டு இந்த முடிவுக்கு வந்ததாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. தஞ்சம் கோரியுள்ள இலங்கை அகதிகள் வேறு பலரின் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமையும் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா பூந்தோட்டம் அகதிமுகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் முகாம் முற்றாக சேதம்
Next post சார்க் மாநாட்டுக்கு சமாந்திரமாக கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் மக்கள் மாநாடு