By 11 July 2020 0 Comments

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய பொறுப்பாளரின் கணக்கு விபரத்துடனான வேண்டுகோள்.. (முழுமையான விபரம்)

அன்பு கலந்த வணக்கம்..

சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களின் பங்களிப்போடும், ஒத்துழைப்புடனும் புங்குடுதீவு மண்ணில் பல அபிவிருத்திக்களை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினராகிய” நாம் நிறைவேற்றியுள்ளோம் என்பது நீங்கள் அறிந்ததே.

இந்த ஆண்டும் பல அபிவிருத்திகள் நடைபெற்று கொண்டிருகின்றன. இதற்கான தங்களின் பங்களிப்புகளும், ஒத்துழைப்புகளும் பெரிதும் உந்துசக்தியாக இருந்து எமது செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாகவும் இருந்து வருகின்றது.

கடந்த வருடத்தில் மட்டும் “ஒன்றிய நிதியிலும், நல்லுள்ளங்களின் தனிப்பட்ட பங்களிப்பிலும்” சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் சார்பில், “மடத்துவெளி கிணறு, நுணுக்கல் கிணறு, கரந்தெழி கிணறு, பொன்னன் கிணறு, சங்கிலிக் கிணறு போன்ற பொதுக் கிணறுகள் புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்டதுடன், விசேடசித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு, அம்பலவாணர் அரங்கின் இரு ஆசிரியர்களுக்கான மாதாந்த சம்பளம்,

மற்றும் மடத்துவெளி முகப்பு முதல், கமலாம்பிகை, புங்கடி வரையான பிரதான வீதி, புங்குடுதீவு முதலாம் வட்டாரம் மானா வெள்ளை வீதி (அடைகாத்தகுளம்), சமூர்த்திவீதி, புங்குடுதீவு கிழக்கூர் சில பகுதிக்கான மின்விளக்குகள் பொருத்துதல், ராஜேஸ்வரிப் பாடசாலை மைதான புனரமைப்புக்கான சிறியதொரு உதவி உட்பட பல விடயங்களை நாம் மேற்கொண்டு உள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தவிர இலங்கை வங்கியில் இடப்பட்ட இருபத்தைந்து இலட்சம் ரூபா புங்குடுதீவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைக்காக “புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த நிதி உட்பட தற்போது சுவிஸ் ஒன்றியத்தின் வங்கியில் உள்ள நிதிகள் மூலம் “புங்குடுதீவு பெருக்குமரப் புனரமைப்பு, புங்குடுதீவு மயானங்கள் (குறிகட்டுவான், மணற்காடு, கேரதீவு, ஊரதீவு, வல்லன் பகுதிகளில் உள்ள மயானங்கள்) புனரமைப்புப் போன்ற நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருவதும் நீங்கள் அறிந்ததே.

ஆகவே புங்குடுதீவின் அபிவிருத்தி நோக்கிய எம் செயற்பாட்டினை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு தொடர்ந்தும் தங்களின் ஒத்துழைப்பினை நாடி நிற்கின்றோம்.

2019ஆம் ஆண்டிற்கான சந்தாப் பணத்தினை இதுவரையில் செலுத்தத் தவறியவர்கள் தயவுசெய்து அதனைச் செலுத்துமாறும், அத்துடன் 2020ஆம் ஆண்டிற்கான சந்தாப் பணத்தினையும் உடன் செலுத்தி, எம்முடன் தோளோடுதோள் நின்று செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தவிர, இதுவரை கணக்காளராக இருந்த திரு அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) அவர்கள், தனிப்பட்ட வேலைப்பளு காரணங்களுக்காக இப்பொறுப்பை என்னிடம் சரியான முறையில் கணக்கு விபரங்களை ஒப்படைத்து, தொடர்ந்தும் கணக்கு பரிசோதகராக பொறுப்பேற்றுள்ளர். அவருக்கு ஒன்றியம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

நான் என்னால் முடிந்தவரை சரிவர உங்களுக்கு கணக்கு விபரங்களை அறிவிப்பேன். இத்துடன் 2019 மற்றும் 2020 (கடந்த ஐந்துமாத) கணக்கு விபரங்களை அனுபியுள்ளோம். இதில் ஏதும் தவறுகள் இருப்பின் அன்றில் விபரங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் என்னிடமோ, அன்றில் ஒன்றியத் தலைவரிடமோ நேரிலோ, தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

அன்புடன்

சின்னத்துரை இலக்ஸ்மணன்
பொருளாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து.
11.07.2020Post a Comment

Protected by WP Anti Spam